நற்குடியோ நாமெல்லாம்...

|

தான் தான் பெரிதென்று
தன்னினம் இழித்துவோர்
இனமானம் காக்க
என்னமாய் போராட்டம்

தான் தான் நற்குடி
தறிகெட்டோர் மற்றெல்லாம்
வீண் வாதம் செய்தலில்
விளங்குது அவர்குடி.

பசுவின் சாணம்மென
புலம்பும் உமதெல்லாம்
வீசும் மணத்துடன்
எருமையின் சாணமோ?

ஏசும் முன் யோசிப்போம்
ஏசுதலிம் கண்ணியம்
என்றுமே இருத்தல்தான்
பேசுதலில் நன்று

மழித்த தன்மானம்
மகிழ்வாய் உமைப்பற்றி
வழிதொடர்வோர் புரியாமல்
வாய்க்கு வந்தபடி

இழிச்சொல்லால் கவியென்ற
ஈனத்தை எடுத்தெறிந்து
கழிவென கழித்திட்டு
காறியதை உமிழ்ந்திடுவோம்...

எஸ்.எம்.எஸ். பற்றிய எண்ணம்...

|


 மாமா பையன் முரளி எனக்கு அனுப்பின மெயில அப்படியே கட் அன் பேஸ்ட் பண்ணியிருக்கேன்! எதற்கு இந்த இடுகைன்னு கடைசியா!







 இந்த காலத்து இளைஞர்கள் இந்த மோகத்தில் ரொம்பவும் நேரத்தை வீணாக்குகிறார்கள். சில பேர் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்து நான் டரியல் ஆகியிருக்கிறேன்! என் சித்தி பையன் கல்லூரியில் படிக்கிறான்... ஒரு நாளைக்கு அவனுக்கு வந்து அனுப்பும் தகவல்கள் பற்றி விசாரிக்க மயக்கமே வந்து விட்டது. அவனிடம் அது பற்றியெல்லாம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டு கொஞ்சம் இதமாய் அட்வைஸ்... இப்போது குறைத்திருப்பான் என எண்ணுகிறேன்!


இது பற்றிய எனது கருத்து சரியா என தெரியவில்லை, பகிர்ந்து கொள்ளுங்களேன்...

குறிப்பு:

அவர்கள் செல்ஃபோனில் வைத்திருக்கும் தகவல்களைப்பற்றி ஒரு தனி இடுகையாய் பிறகு எழுதுகிறேன்...

வெந்த புண்ணில் வேல்...

|

ஈழம் தொடர்பாய் தமிழினத்தலைவர் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை நன்றாய் சூடேற்ற அதற்கு இந்த இடுகை.


ஐயா,

ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய ஈரம், பரிவு கூட உங்களுக்கு இல்லாமல் போனதேன்? தனி ஈழம் அமைத்து தரச் சொல்லவில்லை... எம்மவர் வாழ்வே கேள்வியாய் வழியின்றி இருக்க முக்கிய காரணம் இந்திய அரசு இலங்கைக்கு விடுதலை புலிகளை அழிக்க கொடுத்த தொடர் ஊக்கமும், ஆயுதங்களோடு ஆதரவும் தான். உங்களின் தயவால் இருந்த காங்கிரஸ் ஆட்சியை மிரட்டியாவது உயிர்ப்பலிகளை கொஞ்சம் தடுத்திருக்கலாமே?

மகன், பேரன், மகள் என உங்களின் குடும்பத்தாரின் பதவிக்கே டெல்லியில் கால் கடுக்க காத்திருந்தீரே அப்போதுதான் இங்கு பிரபாகரன் இறந்ததாய் தகவல். பதபதைத்துப் போனோம். இன்று அருமையாய் ஒரு அறிக்கையை வெளியிட்டு எங்களை இன்னமும் முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். எழுதவே மனம் கூசுகிறது. தயவுசெய்து இதைப்பற்றி பேசாமலாவது இருங்களேன், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல்!

இப்படிக்கு ஒரு மானமுள்ள தமிழன்....

இரங்கல் - கேபிள் சங்கர் அண்ணாவின் அப்பா மரணம்.

|

அன்பு அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் அப்பா அவர்கள் இயற்கை எய்துவிட்டார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியை தந்திருக்கிறது. அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம், அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்...

கண்ணாமூச்சி ஆட்டம்...

|






ஒரு சம்பவம்...

கோயம்புத்தூரில் மாமா வீட்டில் தங்கி அவரது கம்பெனியிலேயே எம்.சி.ஏ ப்ராஜெக்ட் செய்த சமயம் நடந்த ஒரு நிகழ்வும், எனக்கு நிகழ்ந்த ஒன்றும் தான் இந்த இடுகையின் சாரம்சங்கள்.

மாமாவின் நண்பர் பொருட்காட்சிக்கு அவரது மனைவி மற்றும் மகனுடன் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். வார இறுதி வேறு, சொல்லவா வேண்டும். மகனை கையிலேயே பிடித்து அழைத்து வந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. திடீரென பையனைக் காணோம்.

கதறி அங்கிங்கும் அரைமணி நேரம் தேட, அவரது துணைவியார் மயங்கி விழ தேட ஒரே பரபரப்பு, அந்த மைக் அறிவிப்பு வரும் வரை.  அது, 'இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை என ஒரு பையன் (பெயரை சொல்லி) இங்கு வந்து எங்களிடம் வந்து சொல்லி சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், பெற்றோர்கள் எங்கிருந்தாலும் வரவும்...

ஒரு வேண்டுகோள்...

இது சாதாரண கண்ணா மூச்சி ஆட்டமல்ல. ஒவ்வொரு விநாடியும் பதறவைத்தது கதற வைக்கும் ஆட்டம். என் மகனை இங்கு மார்க்கெட்டில் தொலைத்து, அரைமணி நேரம் அலைந்து கதறி நான்கு பக்கமும் நான் என் மனைவி, என் நண்பர், அவரது மனைவி என நால்வரும் தேடி அலைய, எங்கள் பிளாக்கிற்கு சென்றிருப்பானோ என எண்ணி அங்கெல்லாம் சென்று பார்க்க, பைத்தியம்போல் அங்கும் இங்கும் நான்கு திசைகளிலும் அலைந்தோம்.

கண்ணீரோடு கதறி சென்ற எனது மனைவியை பார்த்து ஒருவர் அருகே சர்ச்சில் அழைத்துச்சென்று காட்ட, என் மகன் கூலாக கார் வைத்து விளையாண்டுக்கொண்டு, என்னம்மா அழறீங்க என கேட்க, இல்ல கண்ணுல தூசு விழுந்துடுச்சின்னு அம்மணி சொல்ல,  அப்பப்பா சொல்ல வார்த்தைகளில்லை.  அதன் பின் ஒரே சந்தோஷ அழுகை, எங்களுக்கும் எனது நண்பரின் குடும்பத்தாருக்கும்.

நடந்தது இதுதான், எனது மகன் தனியே தனியே வருவதை பார்த்து கூப்பிட்டு உட்கார வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு பெயர், அப்பா அம்மா பெயர் மட்டும் சொல்லியிருக்கிறான். வேறு சொல்ல தெரியவில்லை. அந்த கார் இன்னும் நினைவாய் என் வீட்டில்...

கோவையில் மாமாவின் நண்பருக்கு நடந்தது போல் எதிர்ப்பார்க்க முடியாது. எனக்கு நிகழ்ந்தது போல் நிறைய சம்பவங்களை கேட்டிருக்கலாம், அனுபவப்பட்டிருக்கலாம்.

குழந்தைகளை கூட்டம் நிறைந்த இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது நாம் எவ்வளவுதான் கவனமாய் பார்த்துக்கொண்டாலும், தொலைந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது. அதற்காக கிடைத்த கசப்பான அனுபவத்திற்குப்பின் என் மாமா எப்போதோ என்னிடம் சொன்ன ஆனால் இப்போது பின்பற்றுகின்ற சில விஷயங்களை பிடித்திருந்தால் நீங்களும் செய்யலாமே?
  • உங்களிடைய செல்ஃ போன் எண்ணை சொல்லித்தந்து விடுங்கள்.
  • அவர்களின் சட்டைப்பையில் முழு முகவரி மற்றும் தொடர்பு எண் எழுதிய ஒரு தாளினை வைத்துவிடுங்கள். விசிட்டிங் கார்ட் இருந்தால் மிக நன்று.
  • மற்றவர்களிடம் கூச்சமின்றி பேசுவதற்கு பழக்கப்படுத்துங்கள்...
  • மிக முக்கியமாக இதை எல்லாம் ஒருவேளை காணாமல் போனால் மட்டுமேமற்றவர்களுக்கு சொல்ல அல்லது காட்ட வேண்டும், போலீஸ் அங்கிளை பார்த்தால் முதலில் சொல்லவும் சொல்லித் தாருங்கள்.
  • கடைசியாய் தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

    இதெல்லாம் சரியா? - இது ரொம்ப சாதாரணம் - எண்ணம் - 1

    |


    விஞ்ஞான வளர்ச்சியில் நாம் இன்று எங்கேயோ சென்று கொண்டு இருக்கிறோம். அதே சமயம் அதற்கு நாம் கொடுக்கும் விலை? அதனைப்பற்றி அலசத்தான் 'இதெல்லாம் சரியா?' எனும் தலைப்பில் ஒரு தொடர் இடுகை அவசியமாகிறது.

    உங்களின் கருத்துக்கள் இதனை தொடர்வதற்கும் இன்னும் பல விஷயங்களை ஆய்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருக்கும். அவசியம் எழுதுங்கள், என்னை மேம்படுத்துங்கள்.

    சமீபத்தில் ஊருக்கு சென்றபோது எனது தம்பி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னான், நம்ப முடியவில்லை, முதலில். அவனது பார்வையில், அவன் சொன்னது அப்படியே கீழே...  

    'ராத்திரி கரண்ட் இல்ல. ஒரே புழுக்கமா இருந்துச்சி. சரி வேல நடந்துகிட்டிருக்கிற நம்ம பக்கத்து வீட்டு மாடியில கொஞ்ச நேரம் படுக்கலாம்னு போனேன்.

    அங்க போனப்ப ஏற்கனவே அவன் ஒரு பாய போட்டு படுத்துட்டு இருந்தான். 'என்னடா இங்க' ன்னு கேட்டதுக்கு, தூக்கம் வரல மாமா அதான்னு சொன்னான். கட்டில்ல படுத்து அசதியில கண்ணசந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி பக்கத்துல யாரோ படுத்த மாதிரி இருந்துச்சி, அவனோட அணுகு முறையும் சரியில்ல.

    டக்குனு எழுந்து உக்காந்துட்டேன். பக்கத்துல அவன் திரு திருன்னு நின்னுட்டிருந்தான். அதட்டி என்னடான்னு கேக்க, 'ஆசையா இருந்துச்சி அதான்' னு சொல்ல அதிர்ச்சியா இருந்துச்சி. நான் ஒன்னும் பேசல, நேர கீழா வந்துட்டேன்.

    அதுக்கப்புறம் தூக்கமே வல்ல. கலையில நேரா அன்புகிட்ட போய் சொன்னேன். அவனும் நம்பல. இப்படி நடக்கறது தெரியனும்ங்கறதுக்காக அன்புவையும் அழைச்சிகிட்டு, 'சரி என் கூட வா, விசாரிச்சி பாத்துடலாம்னு சொல்லி அன்ப பக்கத்து ரூம்ல மறைஞ்சிருக்க சொல்லிட்டு, அவன வரச்சொல்லி ஆள அனுப்பிச்சேன்.

    'என்ன மாமா, வர சொன்னீங்கலாம் என்ன விஷயம்' னு கேட்டான். 'சரி ராத்திரி என் அப்படி பண்ணினே?' ன்னு கேட்டேன். 'உங்க மேல ஆசையாயிருந்துச்சி அதான்' ன்னு திரும்பவும் சொல்ல, 'சரி எத்தனை நாளா உனக்கு இந்த பழக்கம், யாரு யாருல்லாம் உன் குரூப்புல' ன்னு கேட்டேன்.

    துருவி துருவி கேட்டதுல அவன் சொன்ன லிஸ்ட்ல பதினைஞ்சிக்கும் மேலே பசங்க இருந்தாங்க. குரூப் லீடர், எல்லாருக்கு கத்துவிட்டது காலேஜ் முடிச்சி இப்போ சும்மா இருக்கிற 'அவன்' னு தெரிஞ்சிச்சு.

    அன்ப ஏன் கேக்க சொன்னான்னா, நான் பண்றதுக்கு ஒரு சாட்சி வேணும், ஏதாவது பிரச்சினைன்னா கூட அவனோட உதவி வேணும்னுதான்.

    அப்புறம் அவனையும் கூப்பிட்டு கேட்டதுக்கு, காலேஜ்ல கத்துகிட்டேன், இதெல்லாம் சகஜம், பெரிய விஷயமா ஏன் எடுத்திக்கிறீங்கன்னு சொன்னான். வீட்டு பக்கம் யாரையும் இனிமே வராதீங்கன்னு விரட்டிட்டேன்'.

    தம்பி சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகவும், கொஞ்சம் புதுமையாகவும் இருந்தது. கிராமத்தில் கூட இப்படி ஒரு ஒழுக்கக்கேடா என கொஞ்சம் அவமானமாயும் இருந்தது. எல்லோரும் பதினைந்து வயது முதல் முப்பது வயசுக்குள் என்பதும், சிலர் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதும் கூடுதல் தகவல்.

    ஓரினச் சேர்க்கை என்பது இன்று இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாய் ஆகியிருக்கிறது, இது அவரவர் இச்சை, மேலை நாடுகளின் இது மிக சாதாரணம் என சொல்லலாம். ஆனால் எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்.

    இந்த இடுகையினை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பிடித்திருந்தால் உங்கள் ஓட்டினை இட்டு மற்றோருக்கும் சேர வழி செய்யுங்களேன்!

    இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...

    |

    மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாக தமிழ் நாடே கொதித்து போயிருந்தது. 

    அது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட கண்டன ஊர்வலம். யாரோ ஒரு காலி கல் விட்டெறிய அப்படியே பெரிதாகி ஒரு மாணவரின் உயிரை பலிகொண்டிருந்தது. அதன் பின்னணியில் ஒருவாரம் நடந்த நிகழ்வுகள் இதோ கீழே.

    அரசுக்கு எதிரான செய்திச் சேனல்கள் மட்டும் போராட்டங்களை திரும்பத் திரும்ப காட்டிகொண்டிருந்தது.

    தமிழ்நாட்டின் எல்லா கல்லூரிகளும் ஒரு நாள் விடுமுறை அறிவித்தது அரசு. சில கல்லூரிகள் ஒருவாரமும், சில மறு அறிவிப்பு வரும்வரை மூடியும் போராட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து அறிவித்தன.

    இறந்த மாணவரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் மாநில அரசு அறிவித்தது. டிவியில் எல்லா நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் ஒளிபரப்பாயின.

    பத்திரிகைகள் முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் பேட்டி, நண்பர்களின் பேட்டி என பிரசுரித்தன.

    அரசியல் தலைவர்கள் அவர்களின் சார்புடைய சேனல்களில் அவர்களுக்கு பிடித்தமான நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்து அவ்வப்போது ஆறுதல் கடிதங்களையும் அறிக்கைகளையும் எழுதிக்கொண்டிருந்தனர்.

    அரசால் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா திட்டமிட்டபடி இனிதே நடந்தது, நேரடி ஒளிபரப்புடன்.

    மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு எதிக்கட்சித் தலைவரைப்பற்றி ஆளுங்கட்சி தலைவர் வெளியிட்ட காட்டமான அறிக்கையினால் ஒருவர் தீக்குளிக்க, ஊடகங்கள் யாவும் அதில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தன.

    அரசியல்வாதிகள் எதிர்போராட்டம், கண்டன ஊர்வலம் என மும்மரமானார்கள். மக்களும், புது வரவால் அந்த மாணவனின் சாவு, ஈழப்பிரச்சினை என யாவும் மறந்து புதியதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.

    தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.

    பிடிச்சிருந்தா கருத்தையும், நிறைய பேரை சேர ஓட்டையும் போடுங்களேன்...

    ரெடி ஜூட்...

    |

    குஷியா கும்மாளமா சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்துக்க ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் என்ன என்ற கேள்வியின் பதில்தான் இந்த வலைப்பூ...

    இதில் எல்லோரும் தங்களது ஜாலியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கலாய்க்கலாம். சிறந்த ஒன்றை நாமே தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசளித்து கவுரவிக்கலாம்...

    (பரிசுக்கு ஸ்பான்சர் நான் தாங்க.. . டோன்ட் ஒர்ரி...)

    உங்களின் மேலான கருத்துக்களை கேட்டு ரெடி ஜூட்...

     

    ©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB