இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...

|

மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாக தமிழ் நாடே கொதித்து போயிருந்தது. 

அது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட கண்டன ஊர்வலம். யாரோ ஒரு காலி கல் விட்டெறிய அப்படியே பெரிதாகி ஒரு மாணவரின் உயிரை பலிகொண்டிருந்தது. அதன் பின்னணியில் ஒருவாரம் நடந்த நிகழ்வுகள் இதோ கீழே.

அரசுக்கு எதிரான செய்திச் சேனல்கள் மட்டும் போராட்டங்களை திரும்பத் திரும்ப காட்டிகொண்டிருந்தது.

தமிழ்நாட்டின் எல்லா கல்லூரிகளும் ஒரு நாள் விடுமுறை அறிவித்தது அரசு. சில கல்லூரிகள் ஒருவாரமும், சில மறு அறிவிப்பு வரும்வரை மூடியும் போராட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து அறிவித்தன.

இறந்த மாணவரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் மாநில அரசு அறிவித்தது. டிவியில் எல்லா நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் ஒளிபரப்பாயின.

பத்திரிகைகள் முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் பேட்டி, நண்பர்களின் பேட்டி என பிரசுரித்தன.

அரசியல் தலைவர்கள் அவர்களின் சார்புடைய சேனல்களில் அவர்களுக்கு பிடித்தமான நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்து அவ்வப்போது ஆறுதல் கடிதங்களையும் அறிக்கைகளையும் எழுதிக்கொண்டிருந்தனர்.

அரசால் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா திட்டமிட்டபடி இனிதே நடந்தது, நேரடி ஒளிபரப்புடன்.

மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு எதிக்கட்சித் தலைவரைப்பற்றி ஆளுங்கட்சி தலைவர் வெளியிட்ட காட்டமான அறிக்கையினால் ஒருவர் தீக்குளிக்க, ஊடகங்கள் யாவும் அதில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தன.

அரசியல்வாதிகள் எதிர்போராட்டம், கண்டன ஊர்வலம் என மும்மரமானார்கள். மக்களும், புது வரவால் அந்த மாணவனின் சாவு, ஈழப்பிரச்சினை என யாவும் மறந்து புதியதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.

தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.

பிடிச்சிருந்தா கருத்தையும், நிறைய பேரை சேர ஓட்டையும் போடுங்களேன்...

29 படித்தோரின் எண்ணங்கள் ::

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.//

கூடவே சாமான்யனும் அடுத்த பரபரப்புக்காக செய்தித் தாள்களையும், ஊடகத்தையும் புரட்டலானான்!

பிரபாகர் said...

//கூடவே சாமான்யனும் அடுத்த பரபரப்புக்காக செய்தித் தாள்களையும், ஊடகத்தையும் புரட்டலானான்!//

சேர்த்திருந்திருக்கலாம். மிக்க நன்றி பழமைபேசி... சரியான அறிவுறுத்தல்...

ஆ.ஞானசேகரன் said...

//தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.//

உண்மையும் எதார்த்தமும்

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...

October 24, 2009 6:47 PM
Post a Comment//

நன்றிங்க, உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கும், கருத்துக்கும்...

மா.குருபரன் said...

//தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்//

இன்று ஈழத்து குழந்தை கூட சொல்லும் தமிழக தலைவரும் அமைச்சர்மாரும் புத்திசுவாதினமற்ற கோமாளிகள் என்று. நான்கு ஜந்து கலியாணம் கட்டி இனம் பெருக்குவதற்கே இவர்களுக்கு நேரம் போதாது பிறகெப்படி?
எம் தமிழ்நாட்டு மக்கள் தான் திருந்த வேண்டும். இங்கே மக்களில் தான் தவறு. மக்கள் சினிமாவிற்கு கொடுக்கும் முன்னுரிமை தமது உரிமைகள் பற்றியதற்கு கொடுப்பதில்லை. இந்த அரசியல் கோமாளிகளின் தலைவன் விரைவில் மரணிக்க வேண்டும். ஈழத்தமிழனின் தூற்றலில் அவன் பிணம் கூட நாறவேண்டும்.
உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் என நினைக்கிறேன்..மன்னிக்கவேண்டும் நண்பரே...

நல்ல பதிவு..

பிரபாகர் said...

//M.Kuruparan said...//

நன்றி நண்பரே, அதீத உணர்ச்சிவயபபட்டிருக்கிறீர்கள். ஆனாலும் நியாமானதே...சில வார்த்தைகள், நீங்கள் தவிர்த்திருக்கலாம்...

ஈரோடு கதிர் said...

உண்மையை சொல்லிவிட்டு லேபிளில் கற்பனை என்று போட்டது நியாயமா?

ஈரோடு கதிர் said...

//மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு எதிக்கட்சித் தலைவரைப்பற்றி ஆளுங்கட்சி தலைவர் வெளியிட்ட காட்டமான அறிக்கையினால்//

இதுதான் முதல் பிரச்சனையை மறக்க வைக்கும் டெக்னிக்

நல்ல தொடக்கம் புதிய தளத்தில்
நல்ல கருத்துகள தாங்கிய இடுகைகள் கொடுங்கள்

வாழ்த்துகள் பிரபா

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
உண்மையை சொல்லிவிட்டு லேபிளில் கற்பனை என்று போட்டது நியாயமா?

October 24, 2009 9:47 PM //

இருக்கைக்காக ஒரு உயிரை காணிக்கையாக்க விரும்பவில்லை, அதான்...

பிரபாகர் said...

//
கதிர் - ஈரோடு said...
//மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு எதிக்கட்சித் தலைவரைப்பற்றி ஆளுங்கட்சி தலைவர் வெளியிட்ட காட்டமான அறிக்கையினால்//

இதுதான் முதல் பிரச்சனையை மறக்க வைக்கும் டெக்னிக்

நல்ல தொடக்கம் புதிய தளத்தில்
நல்ல கருத்துகள தாங்கிய இடுகைகள் கொடுங்கள்

வாழ்த்துகள் பிரபா
//

நன்றி கதிர்... எல்லாம் உங்களின் அன்புக் கட்டளை, வழிகாட்டல் மற்றும் அய்யா என்மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை, அன்பிற்குரிய தம்பிகள், நண்பர்கள்.

புலவன் புலிகேசி said...

//தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.//

இவனுங்க இப்படித்தான்னு மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் வேற யாரும் இல்லாததால மக்களும் இவனுங்களுக்குத்தான் வோட்டுப் போடுறாங்க. மனிதத்தை மதிப்பவன் எவனும் அரசியலில் இல்லை. அரசியல் வாதிகள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

பிரபாகர் said...

//புலவன் புலிகேசி said...
... அரசியல் வாதிகள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.
//

சரியாகச் சொன்னீர்கள் நண்பா.... வரவுக்கும் பின்னூட்டத்தும் நன்றி.

vasu balaji said...

ம்ம்ம். அசத்தல்.

/இறந்த மாணவரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் மாநில அரசு அறிவித்தது. /
அறிவித்தது அவ்வளவு தானே.

பத்திரிகைகள் வசதிப்படி செய்திகளைத் தவிர்த்தோ, திரித்தோ வெளியிட்டன.

இப்போ என்ன சொல்றீங்க கதிர். கட்டுரையிலயும் பிரபாகர் நுழைஞ்சி அசத்துறாரு.எழுதமாட்டிங்குறாராம்ல. யார் விடுறா.

பிரபாகர் said...

//இப்போ என்ன சொல்றீங்க கதிர். கட்டுரையிலயும் பிரபாகர் நுழைஞ்சி அசத்துறாரு.எழுதமாட்டிங்குறாராம்ல. யார் விடுறா//

நன்றிங்கய்யா.. எல்லாம் உங்களின் அன்பும் ஆசிர்வாதமும்.

கலகலப்ரியா said...

தெளிவான நீரோட்டம் போன்ற நடை.. வாழ்த்துகள் பிரபாகர்..

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
தெளிவான நீரோட்டம் போன்ற நடை.. வாழ்த்துகள் பிரபாகர்..
//

நன்றிங்க, ப்ரியா. உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மறதி!!

இது தான் நம் நாட்டின் சாபக்கேடு. கசாப் என்ன ஆனார் சொல்லுங்கள்? ஆருஷி கொலை வழக்கு என்ன ஆனது சொல்லுங்கள்? தேக்கடி வழக்கு என்ன நிலையில் உள்ளது?

தெரியாது. ஏன்? எல்லோரும் மறந்து விட்டோம்.

பிரபாகர் said...

//மறதி!!

இது தான் நம் நாட்டின் சாபக்கேடு. கசாப் என்ன ஆனார் சொல்லுங்கள்? ஆருஷி கொலை வழக்கு என்ன ஆனது சொல்லுங்கள்? தேக்கடி வழக்கு என்ன நிலையில் உள்ளது?

தெரியாது. ஏன்? எல்லோரும் மறந்து விட்டோம்.

October 25, 2009 7:54 AM //

ஊடகங்கள் மட்டுமல்ல, அரசியல், மக்கள் எல்லோரும் ஒரு புதியது வந்தால் பழையது எதையும் நினைவில் வைத்துக்கொள்வது இல்லை... தேசிய வியாதி மறதி...

நன்றி செந்தில்...

ISR Selvakumar said...

நமக்கிருப்பது மறதி அல்ல . . .

பிரபாகர் said...

//r.selvakkumar said...
நமக்கிருப்பது மறதி அல்ல . . .

October 27, 2009 5:30 AM//

நன்றி செல்வா... நீங்களே சொல்லிடுங்களேன் பதிலையும்! சஸ்பென்ஸ் தாங்கல...

வெண்ணிற இரவுகள்....! said...

//அரசியல்வாதிகள் எதிர்போராட்டம், கண்டன ஊர்வலம் என மும்மரமானார்கள். மக்களும், புது வரவால் அந்த மாணவனின் சாவு, ஈழப்பிரச்சினை என யாவும் மறந்து புதியதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.//
உண்மையான வரிகள்

பிரபாகர் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
//அரசியல்வாதிகள் எதிர்போராட்டம், கண்டன ஊர்வலம் என மும்மரமானார்கள். மக்களும், புது வரவால் அந்த மாணவனின் சாவு, ஈழப்பிரச்சினை என யாவும் மறந்து புதியதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.//
உண்மையான வரிகள்
//
நன்றிங்க. என்னை தொர்வதற்கும், கருத்துக்கும்.

சத்ரியன் said...

//தமிழக அமைச்சர்கள் குழு, சால்வைகளுடனும், வாய் நிறைய பொய்யுடனும் முகம் நிறைய சிரிப்புடனும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாய் புன்னகைத்து போஸ் கொடுத்து மற்றுமோர் பயணத்துக்கு தயாராயினர்.//

பிரபா,

நம்ம மக்களும் அடுத்த சேனல் மாத்தி சீரியல் பாத்திருப்பாங்களே.

நல்ல சூடு. ஆனால், அரசியல்வாதிகள் மாடு அல்ல...!

அன்புடன் மலிக்கா said...

நல்ல பதிவு தெளிவான சிந்தனை தொடருங்கள் வாழ்த்துக்கள்...

நன்றிங்க. சரியா சொன்னீங்க. மாடுங்களோட ஒப்பிட்டு அதுங்களை கேவலப்படுத்த வேணாம்னு நினைக்கிறேன்.

பிரபாகர் said...

//
அன்புடன் மலிக்கா said...
நல்ல பதிவு தெளிவான சிந்தனை தொடருங்கள் வாழ்த்துக்கள்...
//

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

உரை நன்று - சிந்தனை நன்று

நல்வாழ்த்துகள் பிரபாகர்

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB