எங்கு போய் முடியும்?....

|


எனது நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலை வெட்டி கீழே ஒட்டியிருக்கிறேன், மிகுந்த வேதனையோடு... 

Today I read a comment in one of the Tamil daily website. It hurts a lot… Just to share with you all


 இன்று காலை பென்னாகரம் தொகுதியில் உள்ள நண்பனுக்கு போன் செய்தேன்... அவன் குடும்ப வோட்டுரிமை முழுவதும் விற்று விட்டானாம்....(ஏழு) விலை என்ன தெரியுமா ....ஒரு அரசாங்க ஊழியரான அவனது அப்பாவின் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம்,அதாவது பதினான்காயிரம் பிளஸ் வெட்டி ,ஷர்ட் சாரி ,கடந்த பத்து நாட்களாக வண்டிக்கு பெட்ரோல் அவனுக்கு பெட்ரோல் (குவாட்டர்).... தினப்படி ஒருமாதமாக நாள் ஒன்றுக்கு இருநூறு... இப்படி நீள்கிறது பட்டியல் ..... இதெல்லாம் வழங்கியது ஆளும்கட்சிமட்டும் தான் (இவன் வேற கட்சி கிட்ட வாங்கலையாம்) ஜென்டில் மேன்......???? இதுல கேவலமான ஒரு விஷயம் அவன் எம்பிஎ பட்டதாரி....... வாழ்க தேர்தல் கமிஷன்.... வளர்க முக குடும்பம்.... 

முன்பு எழுதிய கவிதை(?) இங்கு பொறுத்தமாய் இருக்குமென எண்ணுகிறேன்...

பயம்...

எப்போது சாவுயென
எல்லோரும் ஏங்கிடவே
எங்களூர் எம்.எல்.ஏ
ஏக்கமது பலித்திடுமோ
ஏகமாய் பீதியில்...



****

கண்ணிருந்தும்...


காசு வாங்கி ஓட்டு போட்டு
கண்ணியத்தை கடைபிடித்து
கடமை செய்வாரென நினைக்கும்
கண்ணிருந்தும் குருடர் நாம்..

15 படித்தோரின் எண்ணங்கள் ::

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எப்படியும் அவர்கள் ஜெயித்தபின் ஒன்றும்
செய்யப்போவதில்லை என்ற எண்ணம்தான் ...இதில் யாரை குறைசொல்ல முடியும் sir..
படித்த படிக்காதவர்கள் என எல்லோரும் வாங்காமல் இருந்தால் தான் இதற்க்கு முடிவு கட்ட முடியும் ..

Anonymous said...

எங்கஊர் ல எவனும் சாவ மாட்டேங்கிறான்!

Prathap Kumar S. said...

அண்ணே இதுதான் பழைய மேட்டராச்சே... அரசியல்ல இதான் ஜகஜம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரபா..இதையெல்லாம் தவிர்க்க முடியாது..இன்று தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ., அதிக பட்சம் சட்டசபை இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கூடும் ஆயுள் உள்ள சபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.அதற்கு அரசுக்கு ஆன செலவு ..நம் வரிப்பணம் தான்..எவ்வளவு வீண்..
தான் ஜெயிக்க அந்த எம்.எல்.ஏ., செலவு பண்ணிய தோகையை ஒரு வருடத்தில் எடுக்க வேண்டுமே..முடியுமா? அதுதான் என் கவலை..

Paleo God said...

எல்லாவற்றையும்
வாங்கிவிட்டு வேறெதுவுமில்லாத
நிலையில் எதை வாங்க என்று
தேடியபோது கண்ணில் பட்டது
ஓட்டு
அதையும் வாங்கி விற்றாற்கள்..!!

Unknown said...

thirumangalam culture. all credis goes to Alagiri & Leader of World Tamils. No one here to save tamil nadu.

but, all will comes to end.

மதுரை சரவணன் said...

தேர்தல் கமிசன் என்ன செய்ய முடியும் ...இது ஜனநாயகம் . காசேதான் கடவுள் . என்ன புலம்பி செய்ய...

ஈரோடு கதிர் said...

((:

துபாய் ராஜா said...

என்னத்தை சொல்றது... :((

sathishsangkavi.blogspot.com said...

நண்பா...

இடைத்தேர்தல் வரும் தொகுதிக்கு அரசு திட்டங்கள் எல்லாம் முழுமையா போய்ச்சேருதுன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்...

வாங்குபவர்கள் இருக்கும் வரை கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.....
நாம் யாரை குத்தம் சொல்ல கொடுப்பவரையா? வாங்குபவரையா?

இராகவன் நைஜிரியா said...

கொடுமை. படித்தவர்களே ஓட்டுகளை விற்றால்... மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை..

க ரா said...

ம். என்னத்த சொல்ல.

கல்விக்கோயில் said...

ஜனநாயகமே பனநாயகமாக மாறிவிட்ட பிறகு இது போன்ற நிகழ்வுகள் சாதாரனமே.
என்ன, நாட்டில் பொதுத் தேர்தல்களை ரத்து செய்து விட்டு அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்களே நடத்தினால் மக்கள் சுபிட்ச்சமாக வாழ்வார்கள்.

Unknown said...

//கொடுமை. படித்தவர்களே ஓட்டுகளை விற்றால்... மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.//

ரிப்பீட்டு

MANO நாஞ்சில் மனோ said...

adapaavi...... ini mla"kalai makkale shaabam poddhe kontru poduvaarkal!!!

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB