அங்காடித் தெரு - வாழ்வின் உண்மை...

|

திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது, அதற்கெனவே பல ஜாம்பவான்கள் இருப்பதால். ஆயினும் நேற்று நண்பர் புண்ணாக்கு மூட்டை பாலாவுடன் அங்காடித்தெரு பார்த்ததும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்னை எழுதத்தூண்ட இங்கு நானும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மலிவு விலை என சொல்லி கடைக்காரர்கள் அரசாங்கத்தை, பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என எண்ணி வந்த நமக்கு இந்த படத்தின் மூலம் வசந்தபாலன் அங்குள்ள தொழிலாளர்களையும் சேர்த்துத்தான் என அழுத்தமாய் சொல்லி நம்மை உறைய வைத்துவிடுகிறார்.

பள்ளியில் முதல் மாணவனாய் இருந்தும் தகப்பனின் அகால மரணத்தால் படிக்க இயலாத சூழலில் குடும்பத்தைக் காக்க சென்னைக்கு நண்பனோடு வரும் கதாநாயகன், அந்த ஒரு பிரபல துணிக்கடையில் சேர்ந்து எப்படியெல்லாம் இன்னலுருகிறான் என்பதை சம்பவக்கோர்வைகளால் நம்முள் இயக்குனர் ஆளுமை செய்கிறார்.

அழகிய, துறுதுறுவென சோகத்தையெல்லாம் புதைத்து வெளியே சிரிக்கும் கதாநாயகி, அதற்கான அவளது குடும்ப சூழல். இவர்களுக்குள் வரும் பாசப்பிணைப்பினை பல பிணக்குகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்.

இருவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் சில்லென குளிர்ந்த நீரை கடும் வெயிலில் அலைந்த பின் அருந்துவதால் கிடைக்கும் நிறைவாய் இருக்கிறது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டால் எப்படி வேண்டுமாலும் முன்னேறலாம், அதற்கான வழிகள் நமக்காக திறந்தே இருக்கிறது என்பதை அந்த கழிப்பறையை சுத்தம் செய்து காசு வாங்கி சம்பாதிக்கும் பாத்திரம் மூலம் உணர்த்துகிறார்.

குள்ள மனிதர், ஒரு சீரழிந்த பெண் இருவருக்கும் இடையே உள்ள உறவினையும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையினை வைத்து அவர்களின் உள்ளக்கிடைக்கையை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

சிறார்களை வீட்டு வேலைக்கு அமரத்தி அவர்களை எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்பதை கதாநாயகியின் சகோதரி மூலம் லேசாக கோடிட்டு காட்டுகிறார். சோகம், சோகம், மேலும் சோகம் என சொன்னாலும், கடைசியில் ஒரு வெளிச்சம் இருப்பதாகக் காட்டி நமக்கு கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டி அனுப்புகிறார்.

தொழில் நுட்ப விஷயங்கள் எல்லாம் ஏதுவாய்ப் பொருந்தி படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவியாய். வசனங்கள் எதார்த்தமாயும், பளீரென சாட்டையடியாகவும் பல இடங்களில்.

இந்த படத்தைப்பார்த்தபின், கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.

மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...

22 படித்தோரின் எண்ணங்கள் ::

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...//

Super Lines

பழமைபேசி said...

படத்தை என்னால பாதிக்கு மேல பார்க்க முடியல... சோகமோ சோகம்! சோகத்தோட வீரியத்துல மற்றதைக் கவனிக்க முடியலங்க பிரபாகர்!!

சத்ரியன் said...

//கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.//

பிரபா,

நீங்க என்னத்தையாவது எழுதுங்க. ஆனா படிப்போரின் எண்ணத்தை ஈர்க்கும்படி எழுதிவிடுகிறீர்களே. எப்படி?

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளைச் சுட்டியதன் காரணம், ‘அவர்களும்’ சக மனிதர்கள் தான் என்பதை மறந்து விடும் நம் ‘மனித’த் தன்மையை எண்ணித்தான்.

Paleo God said...

சேம் ப்ளட்..:)))

துபாய் ராஜா said...

சுருக்கமான விமர்சனம் என்றாலும் மிகத்தெளிவான விமர்சனம்.

பனித்துளி சங்கர் said...

/////திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது,///////

அட நம்மாளு !

பனித்துளி சங்கர் said...

சிறந்த படம் அதற்கு தகுந்த சிறப்பான விமர்சனம் மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

shortfilmindia.com said...

padam பார்த்துவிட்டு வந்த இம்பாக்டோடு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நைஸ்

vasu balaji said...

சீர்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம். கண்ணுல சிக்காம போயிருச்சே. விமரிசனம் நறுக்.

settaikkaran said...

தொழிலாளர் சட்டங்களை பெருமளவு ஏய்த்து, மனித உரிமைகளைத் துணிந்து தொடர்ந்து மீறுகிற ’அங்காடித்தெரு’க்களைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு நல்ல திரைப்படம். விமர்சனமும் நோக்கத்தைப் புரிந்து கொண்டு நடுநிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது.

Unknown said...

நானும் எழுத இருந்தேன்.

Anonymous said...

//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்//

சோகமா இருக்குன்னு எல்லாரும் சொல்லறாங்க.
அதனாலேயே இன்னும் பாக்கலை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல விமர்சனம் பிரபாகர். நறுக்கென்று இருந்தது.

ரோஸ்விக் said...

படம் பார்க்க வேண்டும்... பார்க்கிறேன்...

balavasakan said...

அப்பிடியா அண்ணா படத்தை பாரக்கணும் இங்க இப்பிடியான நல்லல படங்கள் எல்லாம் திரையரங்குகளில் போடமாட்டார்கள்... பாரப்போம்..?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...//
Super Lines
//
நன்றிங்கய்யா...

//
பழமைபேசி said...
படத்தை என்னால பாதிக்கு மேல பார்க்க முடியல... சோகமோ சோகம்! சோகத்தோட வீரியத்துல மற்றதைக் கவனிக்க முடியலங்க பிரபாகர்!!
//
அதீத சோகம்தான்... பாத்து பாதிச்சாச்சுங்கண்ணே

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
//கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.//
பிரபா,
நீங்க என்னத்தையாவது எழுதுங்க. ஆனா படிப்போரின் எண்ணத்தை ஈர்க்கும்படி எழுதிவிடுகிறீர்களே. எப்படி?
மேலே குறிப்பிட்டுள்ள வரிகளைச் சுட்டியதன் காரணம், ‘அவர்களும்’ சக மனிதர்கள் தான் என்பதை மறந்து விடும் நம் ‘மனித’த் தன்மையை எண்ணித்தான்.
//
உங்களின் பின்னூட்டமும் அருமை நண்பா...

//
துபாய் ராஜா said...
சுருக்கமான விமர்சனம் என்றாலும் மிகத்தெளிவான விமர்சனம்.
//
நன்றி ராஜா!

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சேம் ப்ளட்..:)))
//
ஆமால்ல.... நன்றி ஷங்கர்....

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது,///////

அட நம்மாளு !
//
நன்றி சங்கர்...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிறந்த படம் அதற்கு தகுந்த சிறப்பான விமர்சனம் மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன் .
//
மீண்டும் நன்றி சங்கர்...

பிரபாகர் said...

//
shortfilmindia.com said...
padam பார்த்துவிட்டு வந்த இம்பாக்டோடு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நைஸ்
//
நன்றிங்கண்ணா...

//
வானம்பாடிகள் said...
சீர்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம். கண்ணுல சிக்காம போயிருச்சே. விமரிசனம் நறுக்.
//
தப்பிச்சேன்...

//
சேட்டைக்காரன் said...
தொழிலாளர் சட்டங்களை பெருமளவு ஏய்த்து, மனித உரிமைகளைத் துணிந்து தொடர்ந்து மீறுகிற ’அங்காடித்தெரு’க்களைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு நல்ல திரைப்படம். விமர்சனமும் நோக்கத்தைப் புரிந்து கொண்டு நடுநிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது.
//
நன்றி நண்பா!

பிரபாகர் said...

//
முகிலன் said...
நானும் எழுத இருந்தேன்.
//
எழுதற அளவுக்கு பாதிப்பா ஏற்படுத்துதுங்கறது உண்மைதான்....

//
சின்ன அம்மிணி said...
//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்//
சோகமா இருக்குன்னு எல்லாரும் சொல்லறாங்க.
அதனாலேயே இன்னும் பாக்கலை
//
சோகமும் ஒரு சுகம்தாங்க... பார்க்கலாம்.

//
ச.செந்தில்வேலன் said...
நல்ல விமர்சனம் பிரபாகர். நறுக்கென்று இருந்தது.
//
நன்றி செந்தில்...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
படம் பார்க்க வேண்டும்... பார்க்கிறேன்...
//
பாருங்க தம்பி...

//
Balavasakan said...
அப்பிடியா அண்ணா படத்தை பாரக்கணும் இங்க இப்பிடியான நல்லல படங்கள் எல்லாம் திரையரங்குகளில் போடமாட்டார்கள்... பாரப்போம்..?
//
அவசியம் பாருங்க...

//
www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//
மிக்க நன்றிங்க...

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB