எனது நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலை வெட்டி கீழே ஒட்டியிருக்கிறேன், மிகுந்த வேதனையோடு...
Today I read a comment in one of the Tamil daily website. It hurts a lot… Just to share with you all
இன்று காலை பென்னாகரம் தொகுதியில் உள்ள நண்பனுக்கு போன் செய்தேன்... அவன் குடும்ப வோட்டுரிமை முழுவதும் விற்று விட்டானாம்....(ஏழு) விலை என்ன தெரியுமா ....? ஒரு அரசாங்க ஊழியரான அவனது அப்பாவின் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம்,அதாவது பதினான்காயிரம் பிளஸ் வெட்டி ,ஷர்ட் , சாரி ,கடந்த பத்து நாட்களாக வண்டிக்கு பெட்ரோல் , அவனுக்கு பெட்ரோல் (குவாட்டர்).... தினப்படி ஒருமாதமாக நாள் ஒன்றுக்கு இருநூறு... இப்படி நீள்கிறது பட்டியல் ..... இதெல்லாம் வழங்கியது ஆளும்கட்சிமட்டும் தான் (இவன் வேற கட்சி கிட்ட வாங்கலையாம்) ஜென்டில் மேன்......???? இதுல கேவலமான ஒரு விஷயம் அவன் எம்பிஎ பட்டதாரி....... வாழ்க தேர்தல் கமிஷன்.... வளர்க முக குடும்பம்.... 1
முன்பு எழுதிய கவிதை(?) இங்கு பொறுத்தமாய் இருக்குமென எண்ணுகிறேன்...
பயம்...
எப்போது சாவுயென
எல்லோரும் ஏங்கிடவே
எங்களூர் எம்.எல்.ஏ
ஏக்கமது பலித்திடுமோ
ஏகமாய் பீதியில்...
****
கண்ணிருந்தும்...
காசு வாங்கி ஓட்டு போட்டு
கண்ணியத்தை கடைபிடித்து
கடமை செய்வாரென நினைக்கும்
கண்ணிருந்தும் குருடர் நாம்..