உங்களின் கருத்துக்கள் இதனை தொடர்வதற்கும் இன்னும் பல விஷயங்களை ஆய்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருக்கும். அவசியம் எழுதுங்கள், என்னை மேம்படுத்துங்கள்.
சமீபத்தில் ஊருக்கு சென்றபோது எனது தம்பி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னான், நம்ப முடியவில்லை, முதலில். அவனது பார்வையில், அவன் சொன்னது அப்படியே கீழே...
'ராத்திரி கரண்ட் இல்ல. ஒரே புழுக்கமா இருந்துச்சி. சரி வேல நடந்துகிட்டிருக்கிற நம்ம பக்கத்து வீட்டு மாடியில கொஞ்ச நேரம் படுக்கலாம்னு போனேன்.
அங்க போனப்ப ஏற்கனவே அவன் ஒரு பாய போட்டு படுத்துட்டு இருந்தான். 'என்னடா இங்க' ன்னு கேட்டதுக்கு, தூக்கம் வரல மாமா அதான்னு சொன்னான். கட்டில்ல படுத்து அசதியில கண்ணசந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி பக்கத்துல யாரோ படுத்த மாதிரி இருந்துச்சி, அவனோட அணுகு முறையும் சரியில்ல.
அதுக்கப்புறம் தூக்கமே வல்ல. கலையில நேரா அன்புகிட்ட போய் சொன்னேன். அவனும் நம்பல. இப்படி நடக்கறது தெரியனும்ங்கறதுக்காக அன்புவையும் அழைச்சிகிட்டு, 'சரி என் கூட வா, விசாரிச்சி பாத்துடலாம்னு சொல்லி அன்ப பக்கத்து ரூம்ல மறைஞ்சிருக்க சொல்லிட்டு, அவன வரச்சொல்லி ஆள அனுப்பிச்சேன்.
'என்ன மாமா, வர சொன்னீங்கலாம் என்ன விஷயம்' னு கேட்டான். 'சரி ராத்திரி என் அப்படி பண்ணினே?' ன்னு கேட்டேன். 'உங்க மேல ஆசையாயிருந்துச்சி அதான்' ன்னு திரும்பவும் சொல்ல, 'சரி எத்தனை நாளா உனக்கு இந்த பழக்கம், யாரு யாருல்லாம் உன் குரூப்புல' ன்னு கேட்டேன்.
துருவி துருவி கேட்டதுல அவன் சொன்ன லிஸ்ட்ல பதினைஞ்சிக்கும் மேலே பசங்க இருந்தாங்க. குரூப் லீடர், எல்லாருக்கு கத்துவிட்டது காலேஜ் முடிச்சி இப்போ சும்மா இருக்கிற 'அவன்' னு தெரிஞ்சிச்சு.
அன்ப ஏன் கேக்க சொன்னான்னா, நான் பண்றதுக்கு ஒரு சாட்சி வேணும், ஏதாவது பிரச்சினைன்னா கூட அவனோட உதவி வேணும்னுதான்.
அப்புறம் அவனையும் கூப்பிட்டு கேட்டதுக்கு, காலேஜ்ல கத்துகிட்டேன், இதெல்லாம் சகஜம், பெரிய விஷயமா ஏன் எடுத்திக்கிறீங்கன்னு சொன்னான். வீட்டு பக்கம் யாரையும் இனிமே வராதீங்கன்னு விரட்டிட்டேன்'.
தம்பி சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகவும், கொஞ்சம் புதுமையாகவும் இருந்தது. கிராமத்தில் கூட இப்படி ஒரு ஒழுக்கக்கேடா என கொஞ்சம் அவமானமாயும் இருந்தது. எல்லோரும் பதினைந்து வயது முதல் முப்பது வயசுக்குள் என்பதும், சிலர் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதும் கூடுதல் தகவல்.
ஓரினச் சேர்க்கை என்பது இன்று இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாய் ஆகியிருக்கிறது, இது அவரவர் இச்சை, மேலை நாடுகளின் இது மிக சாதாரணம் என சொல்லலாம். ஆனால் எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்.
இந்த இடுகையினை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பிடித்திருந்தால் உங்கள் ஓட்டினை இட்டு மற்றோருக்கும் சேர வழி செய்யுங்களேன்!
