அன்பு நண்பர் ஷங்கர் அழைக்க இதோ நானும் களத்தில்...
இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
1.பிடித்த கிரிக்கெட் வீரர் –
சச்சின் – என் தம்பி என பெருமையாய் சொல்லிக்கொள்வேன் எப்போதும். என்றும் சச்சினைப்பற்றி எனது எண்ணம் ஒரே மாதிரிதான். சச்சின் அவுட் ஆனால் அதன் பின் பார்ப்பதையே தவிர்ப்பேன், அல்லது சுரத்தின்றி பார்ப்பேன். ஒரு உண்மையான விளையாட்டு வீரனுக்கு என் தம்பிதான் உதாரணம்...
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் –
மியாண்டட் - அந்த ஒரு குரங்கு சேஷ்டை போதாதா?
3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் –
அக்ரம் – பாகிஸ்தான் அணியில் இருந்த என்னை கவர்ந்த ஒரே பவுலர். இந்தியாவுக்காக அவர் பவுலிங் செய்யும்போது மட்டும் பிடிக்காது... ஹி..ஹி..
வால்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் பவுலர். எந்த ஒரு நேரத்திலும் பதட்டமில்லாமல் வீசுவார், ஜெண்டில் மேன்.
பொல்லாக் - தெ. ஆ பவுலர். இவரையும் ரொம்ப பிடிக்கும்.
4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்
அக்தர் – சர்ச்சைக்குறிய பவுலர் என்பதால் இவரை பிடிக்காது.
5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர்
ஷேன் வார்ன் – என் தம்பியின் நண்பர், இந்த ஜம்பவான் மிரண்டது என் தம்பியிடம் மட்டும்தான் என்பதால் பிடிக்கும்.
6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -
பால் ஆடம்ஸ் - தெ.ஆ சுழல் பந்து வீச்சாளர். போடும் ஸ்டைல் சுத்தமாய் பிடிக்காது.
7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் – சச்சின் – என் தம்பி
கிப்ஸ் - ஆஸ்திரேலியாவை கதற அடித்து 434 - ஐ சேஸ் செய்ய உதவியதால்.. நல்ல களத்தடுப்பாளரும் கூட.
8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - மோங்கியா மற்றும் மனோஜ் பிரபாகர்.
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - சவுரவ் கங்குலி மற்றும் லாரா.
10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்
வினோத் காம்ளி - என் தம்பி எவ்வளவோ உதவி செய்தும் கொழுப்பால் வீணாய் போனவர். (என் தம்பி இவரை, தான் கேப்டனாக இருக்கும்போது தேர்ந்தெடுத்தது தான் அவர் செய்த ஒரு மிகச் சிறிய தவறு என எண்ணுவேன்)
11. பிடித்த களத்தடுப்பாளர் - எல்லா தெ.ஆ வீரர்கள்.
12. பிடிக்காத களத்தடுப்பாளர் - அனில் கும்ப்ளே, பிரசாத், ஹர்பஜன்
13. பிடித்த ஆல்ரவுண்டர் – கபில்தேவ், மைக்கேல் பேவன், க்ளுஸ்னர்.
14. பிடிக்காத ஆல்ரவுண்டர் - மனோஜ் பிரபாகர்
15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட், பில்லி பவுடன், வெங்கட் ராகவன்.
16. பிடிக்காத நடுவர் - டேரல் ஹேர், பக்னர், ஆலீம் தார், ஆசாத் ரப் அப்புறம் என் தம்பிக்கு தவறாய் அவுட் தரும் எவரும்.
17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் - ஹர்ஷா போக்ளே, கவாஸ்கர்.
18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - ரமீஸ் ராஜா, ரவி சாஸ்திரி (கரு நாக்குக்காக)
19. பிடித்த அணி – இந்தியா
20. பிடிக்காத அணி – இந்தியாவை தோற்கடிக்கும் எந்த அணியும், ஆஸ்திரேலியாவை தோற்கடிக்காத எந்த அணியும் (இந்தியா தவிர)
21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும்.
22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – ஆஸ்திரேலியா Vs பங்காளதேஷ்.
23. பிடித்த அணித் தலைவர் - கங்குலி, வெட்டோரி, தோனி, ஸ்டீவ் வாஹ்
24. பிடிக்காத அணித் தலைவர் - ரிக்கி பாண்டிங்
25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின், ஷேவாக்-சச்சின்
26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி
ஜெயசூர்யா-கலுவித்தரன - நாம நிறையா தோத்தது இவங்க ரெண்டு பெரும் ஆடினப்போத்தான்.
.
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - என் தம்பி, ராகுல் ட்ராவிட், பார்டர்.
28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - ஒன் அண்ட் ஒன்லி சச்சின்
29. பிடித்த போட்டி வகை – ஒருநாள்.
30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – சச்சின் (பாரத ரத்னா வெகு விரைவில்)
(இதில் நிறைய முகிலனோடு ஒத்துப்போகிறது...)
யாரையாவது தொடர அழைக்க வேண்டுமே?
ஸ்ரீகிருஷ்ணா எனும் வலைபதிவில் எழுதிவரும் தம்பி ஜெய். எல்லா கிரிக்கெட் மேட்ச்சுக்கும் லைவ் லின்க் கொடுப்பார்.
சேட்டைக்காரன் - இதிலும் அவரின் சேட்டையை பார்க்க வேண்டும்.
கிரிக்கெட் - தொடர் பதிவு...
வகை : தொடர் பதிவு... | author: பிரபாகர்Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
7 படித்தோரின் எண்ணங்கள் ::
super answers praba
அப்பிடிப் போட்டுத்தாக்கு..
படிச்சிக்கிட்டே வந்தேன், என்னடா இலங்கைல இருந்து ஒருத்தர் கூட நீங்க சொல்லலையே - முரளி உட்படன்னு நெனச்சிக்கிட்டே வந்தேன்.. கடைசியில 26ல சொல்லிட்டீங்க.. :))
அப்புறம் பிரபா உங்களக் கூப்பிட்டது பலா பட்டறை ஷங்கர் (எனக்கு முன்னாடியே அவர் கூப்பிட்டதால நான் உங்களக் கூப்பிட முடியாமப்போச்சி) மாத்திருங்க. ஷங்கர் கோச்சுக்கப்போறாப்ல.
அண்ணா... நீங்களும் ஒரு கிரிக்கெட் வெறியர்னு சொல்லுங்க.... ரைட்டு....
:)). nalla irukku
Supero super .
நானும் எழுத்துகிறேன்
Post a Comment