தாயே எம்மை மன்னியுங்கள்...

|

விடுமுறை என்றாலும் ஒரு முக்கிய நிகழ்வுக்காக அலுவலகம் சென்று பரபரப்பாய் இருந்து கிடைத்த கொஞ்ச ஓய்வில் முகிலனைப் படிக்கும்போது முதலில் புரியவில்லை. பட்டாபட்டியின் பதில் பின்னூட்டத்தைப் பார்த்த்ததும் விஷயத்தை ஊடகங்களின் வாயிலாய் படித்து தெரிந்த பின் மண்டைக்குள் ஜிவ்வென்று ஏறியது.

என்ன ஒரு கொடுமை என மனம் பதைத்து அய்யா வானம்பாடிகள், சகோதரி கலகலப்ரியா, லக்கி, பழமைபேசி என வரிசையாய் ஒவ்வொன்றாய் படித்து மானசீகமாய் அவர்களுடன் எனது கோபத்தை பகிர்ந்து கொண்டேன்.

தமிழ், எனக்குத் தெரிந்து இவ்வளவு தரம் தாழ்ந்ததில்லை! சில நய வஞ்சக நாய்களால் இன்று வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், வந்த ஒரு சொந்தத்தை, தமிழ்த்தாயை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் விரட்டியடித்த தமிழகம் என மாறி தலைகுனிந்து வெட்கி நிற்கிறது!

’பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே’ எனப் பாடிச்சென்ற எம்புலவன் பாரதி பிறந்த இந்நாட்டில், பகைமை உணர்ச்சியோடு வயது முதிர்ந்த மூதாட்டியை, சித்திரவதை செய்யப்பட்டு கணவனை இழந்த ஒரு பெண்மணியை, நாட்டுக்காக தனது இன்னுயிரை தனது குடும்பத்தாரோடு அர்ப்பணித்த ஒரு மாபரும் தலைவனின் தாயை, தமிழின் தாயை இப்படியா அவமதிப்பார்கள்?

இன்னுமொரு அன்னையை திருப்திப்படுத்த எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் நாயினும் கீழான இந்த அரசியல்வாதிகள்? எண்ணும்போதே மனம் கொதிக்கிறது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் வரும்போது உரிய பயண ஆதாரங்கள் இல்லாமல் வெளியேறவே முடியாது. எனவே அவர்கள் வந்தது அனுமதியில்லாமல் எனச் சொல்லி ஏமாற்ற முடியாது.

தங்களின் அன்னைக்கெல்லாம் மணி மண்டபம், அவர்களின் பெயரில் விருதுகள், நலத்திட்டங்கள் என வழங்கி கவுரவிக்கும் அரசியல்வாதிகள் ஒரு தன்மானத்தமிழனின் தாய்க்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வக்கில்லையா? கேவலம்!

இரவு முழுதும் மற்ற பதிவர்களின் ஆதங்கங்களைப் படித்தும், இங்கிருக்கும் சிங்கை நண்பர்கள் சத்ரியன், ரோஸ்விக்கோடு பேசித்தான் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்க முடிந்தது. காலையில் மதுரையிலிருந்து கொதிப்பாய் பேசிய எனது நண்பர் ஒருவர், தாயின் சிகிச்சைக்கு தான் முழுச்செலவையும் ஏற்பதாக சொன்னபோது, நீங்கள் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்கள் எல்லாம் தயாராகவே இருக்கிறோம் எனச் சொன்னேன். இதுதான் உண்மைத்தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு.

அய்யா அரசியல்வாதிகளே, தமிழைக்காக்கிறேன், செம்மொழி மாநாடு என சொல்லித்திரிபவர்களே, முதலில் மனிதாபிமானத்தை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்ந்த பின்னும் உங்களையெல்லாம் ஓரிருவராவது நினைத்துப் பார்க்கவேண்டும் என மனதில் வையுங்கள்!

தமிழ்த்தாயே, உங்களுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்காக தமிழனாய் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்கிறேன்...

27 படித்தோரின் எண்ணங்கள் ::

ஸ்ரீ.கிருஷ்ணா said...

தமிழன் என சொல்ல இனி வெட்கப்படவேண்டியதுதான் ...

முகிலன் said...

ரொம்ப வேதனையா இருக்கு பிரபா...

நீங்களும் இதைப் பத்தி எழுதுனதுக்கு நன்றி..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

முதல் எதிர்ப்பு இன்று நான்தானா !

ஏலே மக்கா இருல முழுசா படிச்சிட்டு மீண்டும் வருவேன் .

ச.செந்தில்வேலன் said...

பிரபாகர்.. நினைத்துப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது, நம் நடத்தையை!! குற்றவுணர்ச்சியுடன் :((

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////அய்யா அரசியல்வாதிகளே, தமிழைக்காக்கிறேன், செம்மொழி மாநாடு என சொல்லித்திரிபவர்களே, முதலில் மனிதாபிமானத்தை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்ந்த பின்னும் உங்களையெல்லாம் ஓரிருவராவது நினைத்துப் பார்க்கவேண்டும் என மனதில் வையுங்கள்!
//////////


நண்பரே நீங்க வேற நீங்கள் சொல்லும் அந்த ஓரிருவரவரையும் உயிருடன் கொன்று மேடை அமைத்து குடும்பத்துடன் இருந்து கொன்றவனுக்கு விருது வழங்கி ரசிக்கும் மனித பிறப்பில் இருந்து மாறுபட்ட இந்த சந்துக்கள் அரசியல்வாதிகள் இல்லை அரசியல் வியாதிகள் .

சேட்டைக்காரன் said...

ஒரு அகதிக்கு கொடுக்கிற மரியாதையைக் கூடவா இந்தத் தாய்க்கு வழங்க முடியவில்லை? எவ்வளவு பெரிய வெட்கக்கேடான விஷயம்? இது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய விஷயம்! தன் பிம்பத்தைப் பார்த்துத் தானே காறி உமிழ வேண்டும் போல நொந்து கொள்ள வேண்டிய விஷயம்.

பேயாட்சி செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்னும் மகாகவியின் வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றன.

உங்களோடு சேர்ந்து நானும் குமுறுகிறேன். கூனிக்குறுகி நிற்கிறேன்.

வானம்பாடிகள் said...

ம்ம். உடனடியாக உதவ நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதைவிட, ஜெயலலிதா ஏதோ சொல்லிவிட்டார் என பக்கம் பக்கமாக அலறும் முதல்வர் ஒரு விளக்கம் கூடப் பெறவோ, தரவோ முயலவில்லை. தனி ஈழம் பெற்றுத்தருவேன் என்று அலட்டிய ஜெ. எங்கு ஓய்வெடுக்கிறாரோ. ஆக காரணம் இவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. கத்திவிட்டு அடங்கி விடுவார்கள் என்ற திமிர் தலைகுனிய வைக்கிறது.

சி. கருணாகரசு said...

நேர்மையான ஆதங்கம்...
மனம் வேகிறது...மானம் சாகிறது! வேறென்னத்த சொல்ல....

அருள் said...

அன்னைக்கு உதவமுடியாத பிள்ளைகளின் நிலை மரணத்தைவிட கொடியது.

தாயே, நானும் "கையாலாகாத" உன் பிள்ளைகளில் ஒருவன் தான்.
மன்னித்துவிடுங்கள் அம்மா.

அஹோரி said...

ஐநூறு பக்கத்துல ஒரு அறிக்கையை இந்நேரம் திருட்டு முண்டங்கள் கட்சி தயாரித்து கொண்டிருக்கும். ஆனாலும் ஆண்டவன் தமிழன ரொம்ப சோதிக்கிறான். எப்ப தீபாவளி வரும் ?

துபாய் ராஜா said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..

Kousalya said...

அய்யா அரசியல்வாதிகளே, தமிழைக்காக்கிறேன், செம்மொழி மாநாடு என சொல்லித்திரிபவர்களே, முதலில் மனிதாபிமானத்தை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்ந்த பின்னும் உங்களையெல்லாம் ஓரிருவராவது நினைத்துப் பார்க்கவேண்டும் என மனதில் வையுங்கள்!
i am also having the same feeling sir, i felt very sad to hear the news. how can we say 'we are tamilians' i don't know sir.

ஜோதிஜி said...

நீண்ட நாளைக்குப் பிறகு உள்ளே வந்தாலும் நிறைவாய் இருந்தது. தெளிவான ஆக்கம்.

வெத்து வேட்டு said...

everyday hundreds of people are being are deported by Indian immigration at air ports...should all them be let inside the country????
Please answer

ஹேமா said...

யாரையும் குற்றமோ குறையோ சொல்வதில என்ன இருக்கிறது பிரபா.எங்கள் விதி !

Anonymous said...

வெத்துவேட்டுவாள் ஈஷிண்டு பேஸ வ்ந்துட்டரு. ஈழதமிழன கொல்லரதுன்னா அவருக்கு நாட்டுபற்று வந்துடும்

கலைஞன் குமார் said...

இதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்க ஒரே ஒரு வழிதான். எம் பதிவுகளிலே இந்தக்கொலைகாரக்கூட்டமும் உத்தமம் அரசியல்வணிகர்களும் கூட்டி நடத்தும் செம்மொழி மகாநாட்டிலே கலந்து கொள்ளமாட்டோம் என்ற உறுதிமொழியைக் காட்டுவதும் மற்றைய தோழர்களையும் அக்கூட்டத்தினைப் பகிஸ்கரிக்கக் கேட்டு நாடுதழுவிய அமைப்புகளைக் கட்டி எழுப்புவதுமே. தோழர்களே இது எம்மால் முடியும். கொடுக்கோலன் ராசபக்சேயின் கூட்டுக்களவாணிக்கும்பலான இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, சிபிஎம் போலி மார்க்சியக்கட்சிகள், சிறீலங்கா கொடுங்கோலனின் பேச்சுத்தரகன்போல சிறிலங்கா அழைப்பிலே சென்றுவந்து அங்கே தமிழ்மக்கள் சுமுகமாக வாழ்கிறார்களென்று சொல்லும் போலி இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், பேச்சாளர்களை மறுப்போம். அவர்களின் தொழில்நிலையங்கள்முன்னே எதிர்ப்புக்குரல் எழுப்புவோம். இந்தக்குரலும் உணர்வும் பல்கிப் பெருகிப் பரவவேண்டும் தோழர்களே. வெறுமனே இணையத்திலே ஒரு பதிவு இடுவது மட்டும் எதுவும் செய்துவிடாது. வெறும் விளம்பரம் இந்தக்கசடர்களுக்குக் கொடுப்பதாக மட்டுமே அமையும். ஆழ்ந்து யோசியுங்கள்

ராஜ நடராஜன் said...

//everyday hundreds of people are being are deported by Indian immigration at air ports...should all them be let inside the country????//

We do pass through the immigration check up and we know the reasons behind deportation to certain extend.I hade been into Airport authority services.

Would you please put forward a concrete reason to support your point of view why it is in your ethics parvathi ammal's deportation is valid.

Buddy vethuvettu!You might have your own point of view but how the hell a person could think all the time with negative approach.

I have seen so many times of your comments which is against the sentiments of most of the people and whenever an important issue comes alive on blogs you are there to sneak your nose.Do you have got any grudge against humanity or do you a proxy to other edge?

வெத்து வேட்டு said...

my point is i am against LTTE and their killing of Rajiv.
today all of your crying is that she should have been allowed because she is Praba's mother.
If she can be allowed, why others who are deported my India cannot be allowed?
Indian immigration deported so many Refugees Tamils who stayed in India at some point..left India and came back to see the remaining family in India... did anyone CRY for those people?
why is mass murder praba's mother is special?
Praba's mother is the one who is used here... now she can't even make any decisions.. so it is betterment of everyone - to eliminate unnecessary noices in TN that is good she is booted out...
..
i thought comment sections are to express other views too...
i didn't know that comment section is just to sing same tune...

வெத்து வேட்டு said...

if supporting Praba and LTTE is humanity... I am against HUMANITY :) :)

ராஜ நடராஜன் said...

//i thought comment sections are to express other views too...
i didn't know that comment section is just to sing same tune..//

I do agree with your point of view on refugees,but there were expressions like Mr.Balabarathi did raise his voice through his blog, what could be done to refugee camps.Actually Refugees issues should be handled by the concerned governments,but within bloggers limit they do express and bring forward the issues.

If you are concerned so much of issues like refugees you have the right to say but nothing uttered in your blog.Nobody's going to oppose your views, instead if you have a valid point bloggers will support your views by means of comments and expressions.

I have never been to your site till today,but with a curiosity to know about your views I have stepped into.Apart from a single opening page there are plenty of comments against you for which I regret both your end as well as your one sided look make people angry to express.

Until and unless if you have some grudge against Eelam Tamils issues there is definitely no valid arguments in your comments especially in Parvathi Ammal's issue.As I have mentioned in my previous comment, if you are in other edge then you can pour your venom till you feel to do.But a day it will affect you personlly.

Regarding Prabhakaran,if he is a mass murderer on your point of view the way things are rolling out in Srilanka and Rajapakse's regime behaved during the war and aftermath, do you support that type of killings?All these people are asking an equal and dignified life.Most of us here advocating not only to Eelam Tamils but humanity as a whole.Atleast that's what I am believed in.

Finally when you move around other bloggers site everybody express their views in so many topics apart from the so called religious promoters and castism beaters.It is you sing a same tune buddy.I don't know where you are living and I am not interested to dig into but wherever you live try to live a life with an optimistic view.

Hope my friendly comments will convince you.If it is not atleast watch the game in a silent way which so many peoples do.Hatred at all time will not lead us to anywhere.

See you some other time with a good smile:)Cheer up!

பட்டாபட்டி.. said...

வெத்து வேட்டு said...

my point is i am against LTTE and their killing of Rajiv.
today all of your crying is that she should have been allowed because she is Praba's mother.
If she can be allowed, why others who are deported my India cannot be allowed?
Indian immigration deported so many Refugees Tamils who stayed in India at some point..left India and came back to see the remaining family in India... did anyone CRY for those people?
why is mass murder praba's mother is special?
Praba's mother is the one who is used here... now she can't even make any decisions.. so it is betterment of everyone - to eliminate unnecessary noices in TN that is good she is booted out...
..
i thought comment sections are to express other views too...
i didn't know that comment section is just to sing same tune...
//
வெத்து..

அப்படி நொன்ன ஞாயம் பேசுறவங்க.. என்ன ம&^% க்கு விசா கொடுக்கனும்?...மனிதான பேசுங்க...

S.Sudharshan said...

ஒஒய் வெத்து வெட்டு ... எதிர் கட்சி அரசியல் வாதி மாதிரி எதிரா பேசி பேமஸ் ஆகுரீரோ.. இவளவு நல்லவர்கள் இந்தியாவில இருந்தும் உம்மள மாதிரி ஆளால மானம் போகுது ஒய் .. ராஜீவ் கொண்டதற்க்கு காரணத்தை தேடி படியுங்க சார் . சிங் இந்திரா காந்தியை கொண்டானே சார் அவனை பிரதமராக்கி இருக்கீங்கோ ? அவன் தான் இந்திய அரசு ஆரியன் திராவிடன் எண்டு வித்தியாசம் பாக்கிறான் எண்டு தெரியுதில்லை .. அப்புறம் என்ன பீத்துறேல் .... ஒரு வரலாற்று முழுதாக அறியாமல் பேசுறவனுங்க உங்கட பக்கத்தை பாத்து பேசாதீங்க , மற்றவர்களை திசை திருப்பும் .

ரோஸ்விக் said...

அதான் அவனே சொல்லீட்டானே... மாட்டுவீங்க ஒருநாளைக்கு...

அன்னைக்கு வைச்சுக்குறோம் கொண்டாட்டத்தை.

பிரபாகர் said...

இந்த இடுகைக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றி. வெத்து வேட்டு எனும் பெயரில் வந்து ஒரு அன்பருக்கு என் இனிய நண்பர்களே அழகாய் பின்னூட்டங்களின் வாயிலாக பதிலலித்திருக்கிறார்கள், அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி. தமிழனாக இருக்க முயல்வோம், தமிழ் உணர்வோடு...

malarvizhi said...

நினைத்து பார்க்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகமா இது என்று சந்தேகமாக உள்ளது.

இராமசாமி கண்ணண் said...

அன்பு பிராபகர் அண்ணா தமிழ் என்றும் தரம் தாழ போவதில்லை. அதை பேசும் சில் இழிவானவர்கள்தான் தரம் தாழ்ந்து நடக்கிறார்கள். அவர்களல்லாம் தமிழ் ஆகி விட முடியாது எப்போதும். எனது கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும். மற்றபடி நடந்த சம்பவத்திற்கு நானும் மிகவும் வருந்திக்கொண்டுதான் இருக்கிறேன்.

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB