உங்களின் கருத்துக்கள் இதனை தொடர்வதற்கும் இன்னும் பல விஷயங்களை ஆய்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருக்கும். அவசியம் எழுதுங்கள், என்னை மேம்படுத்துங்கள்.
சமீபத்தில் ஊருக்கு சென்றபோது எனது தம்பி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னான், நம்ப முடியவில்லை, முதலில். அவனது பார்வையில், அவன் சொன்னது அப்படியே கீழே...
'ராத்திரி கரண்ட் இல்ல. ஒரே புழுக்கமா இருந்துச்சி. சரி வேல நடந்துகிட்டிருக்கிற நம்ம பக்கத்து வீட்டு மாடியில கொஞ்ச நேரம் படுக்கலாம்னு போனேன்.
அங்க போனப்ப ஏற்கனவே அவன் ஒரு பாய போட்டு படுத்துட்டு இருந்தான். 'என்னடா இங்க' ன்னு கேட்டதுக்கு, தூக்கம் வரல மாமா அதான்னு சொன்னான். கட்டில்ல படுத்து அசதியில கண்ணசந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி பக்கத்துல யாரோ படுத்த மாதிரி இருந்துச்சி, அவனோட அணுகு முறையும் சரியில்ல.
அதுக்கப்புறம் தூக்கமே வல்ல. கலையில நேரா அன்புகிட்ட போய் சொன்னேன். அவனும் நம்பல. இப்படி நடக்கறது தெரியனும்ங்கறதுக்காக அன்புவையும் அழைச்சிகிட்டு, 'சரி என் கூட வா, விசாரிச்சி பாத்துடலாம்னு சொல்லி அன்ப பக்கத்து ரூம்ல மறைஞ்சிருக்க சொல்லிட்டு, அவன வரச்சொல்லி ஆள அனுப்பிச்சேன்.
'என்ன மாமா, வர சொன்னீங்கலாம் என்ன விஷயம்' னு கேட்டான். 'சரி ராத்திரி என் அப்படி பண்ணினே?' ன்னு கேட்டேன். 'உங்க மேல ஆசையாயிருந்துச்சி அதான்' ன்னு திரும்பவும் சொல்ல, 'சரி எத்தனை நாளா உனக்கு இந்த பழக்கம், யாரு யாருல்லாம் உன் குரூப்புல' ன்னு கேட்டேன்.
துருவி துருவி கேட்டதுல அவன் சொன்ன லிஸ்ட்ல பதினைஞ்சிக்கும் மேலே பசங்க இருந்தாங்க. குரூப் லீடர், எல்லாருக்கு கத்துவிட்டது காலேஜ் முடிச்சி இப்போ சும்மா இருக்கிற 'அவன்' னு தெரிஞ்சிச்சு.
அன்ப ஏன் கேக்க சொன்னான்னா, நான் பண்றதுக்கு ஒரு சாட்சி வேணும், ஏதாவது பிரச்சினைன்னா கூட அவனோட உதவி வேணும்னுதான்.
அப்புறம் அவனையும் கூப்பிட்டு கேட்டதுக்கு, காலேஜ்ல கத்துகிட்டேன், இதெல்லாம் சகஜம், பெரிய விஷயமா ஏன் எடுத்திக்கிறீங்கன்னு சொன்னான். வீட்டு பக்கம் யாரையும் இனிமே வராதீங்கன்னு விரட்டிட்டேன்'.
தம்பி சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகவும், கொஞ்சம் புதுமையாகவும் இருந்தது. கிராமத்தில் கூட இப்படி ஒரு ஒழுக்கக்கேடா என கொஞ்சம் அவமானமாயும் இருந்தது. எல்லோரும் பதினைந்து வயது முதல் முப்பது வயசுக்குள் என்பதும், சிலர் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதும் கூடுதல் தகவல்.
ஓரினச் சேர்க்கை என்பது இன்று இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாய் ஆகியிருக்கிறது, இது அவரவர் இச்சை, மேலை நாடுகளின் இது மிக சாதாரணம் என சொல்லலாம். ஆனால் எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்.
இந்த இடுகையினை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பிடித்திருந்தால் உங்கள் ஓட்டினை இட்டு மற்றோருக்கும் சேர வழி செய்யுங்களேன்!
47 படித்தோரின் எண்ணங்கள் ::
ப்ச்
//பழமைபேசி said...
ப்ச்
//
ஒரு வார்த்தையிலும் அழகாய் சொல்ல முடியுமா? முடியும், பழமைபேசியால்...
ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப் படாத பொழுதே எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் பத்து இடத்திற்குள் இந்தியா. இனி என்ன நடக்குமோ???
//புலவன் புலிகேசி said...
ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப் படாத பொழுதே எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் பத்து இடத்திற்குள் இந்தியா. இனி என்ன நடக்குமோ???
//
பயமாத்தான் இருக்கு. உங்க கருத்துக்கு நன்றி புலிகேசி....
என்ன கொடுமை , நம்ம ஊர்லயும் இப்படி திரியிராங்களா ....
/ஆனால் எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்./
புரியாமல் செய்வதல்ல இது. வக்கிரங்களின் வடிகால்.
//ஸ்ரீ.கிருஷ்ணா said...
என்ன கொடுமை , நம்ம ஊர்லயும் இப்படி திரியிராங்களா ....//
ஆமாம் ஜெய்... அதிர்ச்சியாத்தான் இருக்கு.
// வானம்பாடிகள் said...
/ஆனால் எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்./
புரியாமல் செய்வதல்ல இது. வக்கிரங்களின் வடிகால்.
//
சரிதாங்கய்யா, அது பற்றியும் அடுத்து எழுத இருக்கிறேன்... எதனால் என. கருத்துக்கு நன்றிங்கய்யா...
நான் சின்ன வயசா இருக்கிறப்போ... எங்க பகுதியில ஓடும் ஒரு டவுன் பஸ் கண்டக்டர் இப்படித்தான் ஒருமுறை கை வைக்க முயற்சித்தான்... முதலில் பயம் எப்படி அவனை சமாளிப்பதென்று, அடுத்த நிமிடம் கடும் கோபத்தில் கத்திதேன் "கையை எடுறா...."னு. அதன்பின் அவன் பயந்துட்டான்.
இந்த நாய்ங்க... எல்லோர் கிட்டேயும் இப்படி நூல் விட்டுப் பார்க்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை...
//கதிர் - ஈரோடு said...

நன்றி கதிர். நமக்கு நடந்ததும் ஒன்னு இருக்கு.... அத பதிவாவே போடறேன்....
ஆம் இது இயற்கையில் உடம்பு அமைப்பே அப்படி இல்லையே...ஆணும் பெண்ணும் சேர வேண்டும் என்பது தான் இயல்பு ...ஒரு நாணயம் என்றால் ஒரு தலை ஒரு பூவாக இருக்க வேண்டும் ரெண்டுமே தலையாக இருக்க கூடாது
//வெண்ணிற இரவுகள்....! said...
ஆம் இது இயற்கையில் உடம்பு அமைப்பே அப்படி இல்லையே...ஆணும் பெண்ணும் சேர வேண்டும் என்பது தான் இயல்பு ...//
சரிதான் கார்த்திக்... என்ன செய்ய. எல்லாம் காலத்தின் கொடுமை....
என்ன கேவலமான உறவு இது.......
வடக்கில் இது பற்றி ஒரு படம் எடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளார்கள்...........
நல்ல வேலை தமிழில் இல்லை........ இல்லாமலே இவ்ளோ கேவலமாக செய்க்ரார்கள்.......
//ஊடகன் said...
என்ன கேவலமான உறவு இது.......
வடக்கில் இது பற்றி ஒரு படம் எடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளார்கள்...........
நல்ல வேலை தமிழில் இல்லை........ இல்லாமலே இவ்ளோ கேவலமாக செய்க்ரார்கள்.......
//
ஆமாம் ஊடகன், அதிர்ச்சியில் தான் இந்த இடுகை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
இந்த மாதுரி அனுபவங்கள் எல்லோருக்கும் கிடக்கும் என்றே நினைக்கின்றேன். இது ஒரு இயற்கையான நிகழ்வா? இல்லை ஒரு மனநோயா? என்பதை அறிந்தவர்கள் சொல்லுங்களேன். மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லுங்கள்.. இதை மாற்ற வழிகளையும் சொல்லுங்கள்... தேவைபடுபவர்கள் எடுத்துக்கொள்வார்கள்
பிரபாகர்,
பிரச்சினையை சொல்லீட்டீங்க, உங்க அதிர்ச்சி புரியுது.
ஆனா இதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க.....
//ஆ.ஞானசேகரன் said...

கண்டிப்பாய் இதன் தொடர்ச்சியில் எழுத இருக்கிறேன். நன்றிங்க... உங்களின் கருத்துக்கு.
//
தராசு said...
பிரபாகர்,
பிரச்சினையை சொல்லீட்டீங்க, உங்க அதிர்ச்சி புரியுது.
ஆனா இதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க.....
//
கண்டிப்பாண்ணே... சொல்லணும். அது பத்தி படிச்சுகிட்டிருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல எழுதறேன்.
என் ஆசிரியர் ஒருவரிடமிருந்து..ஒரு இரவு பஸ் பயணத்தில்...ஒரு தியேட்டரில்..எனக்கும் அது போல் அனுபவங்கள் உண்டு
வாங்கண்ணே! உடம்பு சுகமாயிடுச்சா!
எல்லோருக்கும் ஒரு விதத்தில இந்த பாதிப்பு இருக்குங்கண்ணே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கண்ணே
இந்த மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு பஸ்ல போறப்ப ஒருத்தன் பின்னாடி வந்து ஒரசிகிட்டெ இருந்தான் பொருத்து பார்த்தேன், பின்னாடி திரும்பி விட்டேன் ஒரு அறை. அவன் எதுவும் பேசாம அடுத்த நிறுத்தத்துல இறங்கிட்டான்.
இது....
ஒரு ஜீன் களின் சித்து வேலை ...காரணமாக
பாலியல் ஒர்மொன்களின் குளறுபடி
என்று ஒரு வைத்திய நிபுணர் சொல்ல கேள்வி
அதனால் தான் மேலை நாடுகளில் அங்கீகரிக்க பட்டிருக்கிறது
என்றாலும் எங்களால ஏற்றுக்கொள்ள முடியாது
கொஞ்சம் ஓவர் தான்
//
jeevanbennie said...

சரியா செஞ்சீங்க... உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க....
//
Balavasakan said...
இது....
ஒரு ஜீன் களின் சித்து வேலை ...காரணமாக
பாலியல் ஒர்மொன்களின் குளறுபடி
என்று ஒரு வைத்திய நிபுணர் சொல்ல கேள்வி
அதனால் தான் மேலை நாடுகளில் அங்கீகரிக்க பட்டிருக்கிறது
என்றாலும் எங்களால ஏற்றுக்கொள்ள முடியாது
கொஞ்சம் ஓவர் தான்
//
இத பத்தி இன்னும் கொஞ்சமும், விடுபடுதலுக்கு வழிகளையும் எழுதலாம்னு இருக்கேன், கொஞ்சம் நல்லா படிச்சிட்டு.
என்ன கொடுமை.. அநியாயம்... அக்கிரமம்... அசிங்கம்... இப்டி எல்லாம் என்னால சொல்ல முடியாது பிரபாகர்...
இடம்.. பொருள்.. ஏவல்... அவங்க அவங்க பிரச்சன... சூழல்... ஆணுக்குள் இருக்கும் பெண்.. இத்யாதி இத்யாதி.. இது பத்தி மறைந்த எழுத்தாளர்.. சு. சமுத்திரம் ஒரு புத்தகம் எழுதி இருக்கார்...
ஆங்கிலத்திலும் சில எழுத்துக்களில் படித்திருக்கிறேன்... அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது..
ஆனால்.. மற்றவர்கள் மேல் இதைத் திணிப்பதும்.. கட்டாயப் படுத்துவதும்.. ஏற்றுக்கொள்ள முடியாதது.. !
//கலகலப்ரியா said...
என்ன கொடுமை.. அநியாயம்... அக்கிரமம்... அசிங்கம்... இப்டி எல்லாம் என்னால சொல்ல முடியாது பிரபாகர்...
//
ப்ரியா உங்களிடமிருந்து இப்படி ஒரு பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் சொல்ல வருவது பள்ளி செல்லும் இளைஞர்கள் இவ்வாறு பாழாகிறார்களே என்றுதான். இன்னும் விரிவாய் இது பற்றி எழுத இருக்கிறேன். நன்றி ப்ரியா...
அடப்பாவமே..
சர்ச்சைக்குரிய விவாதங்களை எடுத்துச்சொல்ல தைரியம் வேண்டும்...
சமூக எதார்த்தத்தை எளிமையாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்...
உண்மைதான்....
நாம் பார்க்கும் சராசரி நபர்களுள் பல இடங்களில் இதுபோன்றவர்களையும் பார்க்கமுடிகிறது...
அவர்களைப் பார்க்கும் போது கோபம் வரும் அதே வேலையில் இது ஒரு வகையான நோய்தானே...
என்ற எண்ணமும் வருகிறது..
அரசு இவர்களையும் கவனத்தில் கொண்டு விழிப்புணர்வு மையங்களை அமைக்கவேண்டும்....
//
பிரியமுடன்...வசந்த் said...
அடப்பாவமே..
//
வாங்க தம்பி.... வரவிற்கு நன்றி...
//
முனைவர்.இரா.குணசீலன் said...
சர்ச்சைக்குரிய விவாதங்களை எடுத்துச்சொல்ல தைரியம் வேண்டும்...
சமூக எதார்த்தத்தை எளிமையாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்...
உண்மைதான்....
நாம் பார்க்கும் சராசரி நபர்களுள் பல இடங்களில் இதுபோன்றவர்களையும் பார்க்கமுடிகிறது...
அவர்களைப் பார்க்கும் போது கோபம் வரும் அதே வேலையில் இது ஒரு வகையான நோய்தானே...
என்ற எண்ணமும் வருகிறது..
அரசு இவர்களையும் கவனத்தில் கொண்டு விழிப்புணர்வு மையங்களை அமைக்கவேண்டும்....
//
நீங்கள் சொல்வது சரி. இது பற்றிய விவரங்களை படித்து வருகிறேன் அய்யா.... அடுத்த இடுகையில் சொல்ல உத்தேசம்...
முடிஞ்ச வரைக்கும் கொழந்தைங்கள இது மாதிரி ஆட்கள் கிட்ட நெருங்கவே விடாதீங்க, ஏன்னா அவங்களோட பயத்த சாதகமாப் பயன்படுத்தி என்ன வேணாலும் செய்வாங்க. சீரழிஞ்சு போன பல குழந்தைகளப் பத்தி தெரியும்.
//நாகா said...
முடிஞ்ச வரைக்கும் கொழந்தைங்கள இது மாதிரி ஆட்கள் கிட்ட நெருங்கவே விடாதீங்க, ஏன்னா அவங்களோட பயத்த சாதகமாப் பயன்படுத்தி என்ன வேணாலும் செய்வாங்க. சீரழிஞ்சு போன பல குழந்தைகளப் பத்தி தெரியும்.
//
விஷயத்த கேள்விப்பட்டவுடன் செஞ்ச முதல் வேலை அதுதாங்க.... வரவிற்கும் கருத்துக்கும் நன்றிங்க நாகா...
இது உண்மை. திருப்பூரில் உள்ள விசயங்களை வெளியே சொல்ல முடியவில்லை. உண்மை பிரபாகர்.
என்ன கொடுமைடா யப்பா....ஒரு சிலர் அவ்வாறு இருக்க கேள்விபட்டிருக்கிறேன்... இதுல ஒரு குழுவா வேற செயல்படுறாங்களா? அதிர்ச்சியா இருக்குதண்ணே...
இது ஒரு வகையான மன நோயானாலும், இந்த நோய் இப்ப நிறைய பேருக்கு இருக்க மாதிரில்ல இருக்கு நண்பரே...
தொடருங்கள் தெரிந்து கொள்கிறோம்.
/// எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்.
///
அருமையான பதிவு
அருமையான கருத்துக்கள் நண்பா
//
ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
இது உண்மை. திருப்பூரில் உள்ள விசயங்களை வெளியே சொல்ல முடியவில்லை. உண்மை பிரபாகர்.
//
ம்... எல்லா இடத்திலும் சாதாரணமா இருக்கும் போலிருக்கு. நன்றிங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும்.
//
ரோஸ்விக் said...
என்ன கொடுமைடா யப்பா....ஒரு சிலர் அவ்வாறு இருக்க கேள்விபட்டிருக்கிறேன்... இதுல ஒரு குழுவா வேற செயல்படுறாங்களா? அதிர்ச்சியா இருக்குதண்ணே...
இது ஒரு வகையான மன நோயானாலும், இந்த நோய் இப்ப நிறைய பேருக்கு இருக்க மாதிரில்ல இருக்கு நண்பரே...
தொடருங்கள் தெரிந்து கொள்கிறோம்.
//
கண்டிப்பாய். நன்றி ரோஸ்விக். இரு நாட்களில் எழுதுகிறேன்.
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
/// எனது ஆதங்கமெல்லாம் இன்றைய இந்தியாவின் தூண்கள் எனச் சொல்லப்படும் இளைஞர்கள் சரியான புரிதல் இல்லாமல் தங்களின் வாழ்வை வீணடிக்கிறார்களே என்பதுதான்.
///
அருமையான பதிவு
அருமையான கருத்துக்கள் நண்பா
//
நன்றிங்க நண்பா. உங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்....
அண்ணா தொடர் பதிவு இருக்கிறது விரும்பினால் சும்மா கலாய்த்து விடுங்கள் ...
http://balavasakan.blogspot.com/2009/11/blog-post_04.html
அன்பு நண்பா , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .
வருக கருத்துக்களை தருக
There is a difference between 'homosexual activity' and homosexuals (LGBT community). A person who identifies themself as LGBT dont have to indulge in physical relationship with another person to find out their sexuality(sexual orientation). Their sexual orientation is in them.
On the other hand homosexual activity, which is mostly practised by teens (experimentation) and 'straight curious' people is different. They dont have to be necessarily homosexuals, there are various reasons why they indulge in it. It might vary from mere pleasure to curiosity.
I appriciate you bringing up this topic. I would suggest you to differenciate between the two i.e LGBT community and people who indulge in homosexual activity (who are not necessarily LGBT).
Sorry for writing in english.
Thanks Moulee for sharing your thoughts. This is a real incident which happened at my native place. I agree with your points. Its a very
big topic to discuss...
Thanks for your first visit and comment.
:)
இயற்கைக்கு மாறா இருக்கறதுனாலதான் எய்ட்ஸ் வருது
// இதெல்லாம் சகஜம், பெரிய விஷயமா ஏன் எடுத்திக்கிறீங்கன்னு சொன்னான். //
எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டதுதான் பிரச்சனையே...
//ஆங்கிலத்திலும் சில எழுத்துக்களில் படித்திருக்கிறேன்...//
எல்லாமு அங்க இருந்துதான் கத்துகிட்டு இருக்கோம்... இது நெல்லோடு சேர்ந்து புல்லும் கதைபோலத்தான்....
//எம்.எம்.அப்துல்லா said...
:)
//
நன்றிங்க...
//
சின்ன அம்மிணி said...
இயற்கைக்கு மாறா இருக்கறதுனாலதான் எய்ட்ஸ் வருது
//
இது பற்றிய விழிப்புணர்வு கிராமங்கள்ல ரொம்ப கம்மிங்க...
//
ஷோபிகண்ணு said...
// இதெல்லாம் சகஜம், பெரிய விஷயமா ஏன் எடுத்திக்கிறீங்கன்னு சொன்னான். //
எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டதுதான் பிரச்சனையே...
NOVEMBER 13, 2009 12:42 PM
ஷோபிகண்ணு said...
//ஆங்கிலத்திலும் சில எழுத்துக்களில் படித்திருக்கிறேன்...//
எல்லாமு அங்க இருந்துதான் கத்துகிட்டு இருக்கோம்... இது நெல்லோடு சேர்ந்து புல்லும் கதைபோலத்தான்....
//
வருகைக்கு நன்றிங்க. எனது இடுகைகளை http://abiprabhu.blogspot.com ல் பாருங்கள்...
NOVEMBER 13, 2009 12:46 PM
Post a Comment