கண்ணாமூச்சி ஆட்டம்...

|

ஒரு சம்பவம்...

கோயம்புத்தூரில் மாமா வீட்டில் தங்கி அவரது கம்பெனியிலேயே எம்.சி.ஏ ப்ராஜெக்ட் செய்த சமயம் நடந்த ஒரு நிகழ்வும், எனக்கு நிகழ்ந்த ஒன்றும் தான் இந்த இடுகையின் சாரம்சங்கள்.

மாமாவின் நண்பர் பொருட்காட்சிக்கு அவரது மனைவி மற்றும் மகனுடன் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். வார இறுதி வேறு, சொல்லவா வேண்டும். மகனை கையிலேயே பிடித்து அழைத்து வந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. திடீரென பையனைக் காணோம்.

கதறி அங்கிங்கும் அரைமணி நேரம் தேட, அவரது துணைவியார் மயங்கி விழ தேட ஒரே பரபரப்பு, அந்த மைக் அறிவிப்பு வரும் வரை.  அது, 'இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை என ஒரு பையன் (பெயரை சொல்லி) இங்கு வந்து எங்களிடம் வந்து சொல்லி சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், பெற்றோர்கள் எங்கிருந்தாலும் வரவும்...

ஒரு வேண்டுகோள்...

இது சாதாரண கண்ணா மூச்சி ஆட்டமல்ல. ஒவ்வொரு விநாடியும் பதறவைத்தது கதற வைக்கும் ஆட்டம். என் மகனை இங்கு மார்க்கெட்டில் தொலைத்து, அரைமணி நேரம் அலைந்து கதறி நான்கு பக்கமும் நான் என் மனைவி, என் நண்பர், அவரது மனைவி என நால்வரும் தேடி அலைய, எங்கள் பிளாக்கிற்கு சென்றிருப்பானோ என எண்ணி அங்கெல்லாம் சென்று பார்க்க, பைத்தியம்போல் அங்கும் இங்கும் நான்கு திசைகளிலும் அலைந்தோம்.

கண்ணீரோடு கதறி சென்ற எனது மனைவியை பார்த்து ஒருவர் அருகே சர்ச்சில் அழைத்துச்சென்று காட்ட, என் மகன் கூலாக கார் வைத்து விளையாண்டுக்கொண்டு, என்னம்மா அழறீங்க என கேட்க, இல்ல கண்ணுல தூசு விழுந்துடுச்சின்னு அம்மணி சொல்ல,  அப்பப்பா சொல்ல வார்த்தைகளில்லை.  அதன் பின் ஒரே சந்தோஷ அழுகை, எங்களுக்கும் எனது நண்பரின் குடும்பத்தாருக்கும்.

நடந்தது இதுதான், எனது மகன் தனியே தனியே வருவதை பார்த்து கூப்பிட்டு உட்கார வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு பெயர், அப்பா அம்மா பெயர் மட்டும் சொல்லியிருக்கிறான். வேறு சொல்ல தெரியவில்லை. அந்த கார் இன்னும் நினைவாய் என் வீட்டில்...

கோவையில் மாமாவின் நண்பருக்கு நடந்தது போல் எதிர்ப்பார்க்க முடியாது. எனக்கு நிகழ்ந்தது போல் நிறைய சம்பவங்களை கேட்டிருக்கலாம், அனுபவப்பட்டிருக்கலாம்.

குழந்தைகளை கூட்டம் நிறைந்த இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது நாம் எவ்வளவுதான் கவனமாய் பார்த்துக்கொண்டாலும், தொலைந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது. அதற்காக கிடைத்த கசப்பான அனுபவத்திற்குப்பின் என் மாமா எப்போதோ என்னிடம் சொன்ன ஆனால் இப்போது பின்பற்றுகின்ற சில விஷயங்களை பிடித்திருந்தால் நீங்களும் செய்யலாமே?
  • உங்களிடைய செல்ஃ போன் எண்ணை சொல்லித்தந்து விடுங்கள்.
  • அவர்களின் சட்டைப்பையில் முழு முகவரி மற்றும் தொடர்பு எண் எழுதிய ஒரு தாளினை வைத்துவிடுங்கள். விசிட்டிங் கார்ட் இருந்தால் மிக நன்று.
  • மற்றவர்களிடம் கூச்சமின்றி பேசுவதற்கு பழக்கப்படுத்துங்கள்...
  • மிக முக்கியமாக இதை எல்லாம் ஒருவேளை காணாமல் போனால் மட்டுமேமற்றவர்களுக்கு சொல்ல அல்லது காட்ட வேண்டும், போலீஸ் அங்கிளை பார்த்தால் முதலில் சொல்லவும் சொல்லித் தாருங்கள்.
  • கடைசியாய் தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

    32 படித்தோரின் எண்ணங்கள் ::

    Anonymous said...

    //இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை //

    சரிதான். ஒருவேளை குழந்தைதான் பெற்றோரை தொலைத்ததோ என்னவோ :)

    vasu balaji said...

    முக்கியமான உபயோகமான தகவல். அவனாவது குழந்தை.எங்கள் தோழர் ஒருவர் 13 பேருடன் சபரி மலை சென்ற பொழுது தனியாகப் போய், இவர்கள் தேட என்னுடன் வந்த 13 பேரை காணவில்லை. உடனடியாக இந்த இடத்துக்கு வரவும் என அறிவித்தார்.=))

    தராசு said...

    //எங்கள் தோழர் ஒருவர் 13 பேருடன் சபரி மலை சென்ற பொழுது தனியாகப் போய், இவர்கள் தேட என்னுடன் வந்த 13 பேரை காணவில்லை. உடனடியாக இந்த இடத்துக்கு வரவும் என அறிவித்தார்.=))//

    இது சூப்பரப்பு.

    வெண்ணிற இரவுகள்....! said...

    இதைப் போன்ற அனுபவம் என் சொந்தத்திலும் நடந்தது .........ரங்கநாதன் தெருவில்.
    ஆனால் துலைந்த பையன் கொஞ்சம் விவரம் ......அதனால் அங்கு நின்று கொண்டிருந்த காவல் நிலைய அதிகாரிகளுடன் பத்திரமாக இருந்தான்

    ஊடகன் said...

    இதை படித்தவுடன் ஐயா ராமகிருஷ்ணனின் துணை எழுத்து தான் மட்டுப்படுகிறது........

    நல்ல வேண்டுகோள்........நன்றி.......

    ஹேமா said...

    பிரபா,உங்கள் பதிவு படித்ததும் ஜேர்மனியில் வாழும் என் சிநேகிதியை நினைத்துச் சிரித்துவிட்டேன்.மூன்று குழந்தைகள்.
    முறையே 9,6,3 இருக்கும்.சரியான குழப்படி.ஒரு நாள் கோபமாயும் ஆத்திரமாயும்சொன்னாள் "இதுகளின்ர குழப்படி தாங்கமுடியேல்ல.எங்கயும் தூரமாய்க் கொண்டு போய் விட்டிட்டு வந்தாலும்,நாய்க்குட்டிகள் போல வீட்டுக்கு வந்து சேர்ந்திடுங்கள்.
    ஏனென்றால் போன் நம்பர்,வீட்டு விலாசம்,அப்பா அம்மா பெயர் எல்லாம் சொல்லிக் கொடுத்திட்டேனே"என்று.

    சத்ரியன் said...

    பிரபாகர்,

    பயனுள்ள பதிவு.

    கலகலப்ரியா said...

    அவசியமான பதிவு... அசத்துங்க..!

    neenga block nu sonnatha blog nu padikkum apaayam blog ulagaththil undu.. =))

    பிரபாகர் said...

    //
    சின்ன அம்மிணி said...
    //இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை //

    சரிதான். ஒருவேளை குழந்தைதான் பெற்றோரை தொலைத்ததோ என்னவோ :)
    //
    நன்றிங்க சின்ன அம்மிணி. அப்படித்தான் அறிவிக்கிறவங்ககிட்ட சொல்லியிருக்கு!

    //
    வானம்பாடிகள் said...
    முக்கியமான உபயோகமான தகவல். அவனாவது குழந்தை.எங்கள் தோழர் ஒருவர் 13 பேருடன் சபரி மலை சென்ற பொழுது தனியாகப் போய், இவர்கள் தேட என்னுடன் வந்த 13 பேரை காணவில்லை. உடனடியாக இந்த இடத்துக்கு வரவும் என அறிவித்தார்.=))
    //

    இடுகையை விட உங்கள் பின்னூட்டம் மிகவும் கலக்கலாய் இருக்கிறது அய்யா!

    பிரபாகர் said...

    //
    தராசு said...
    //எங்கள் தோழர் ஒருவர் 13 பேருடன் சபரி மலை சென்ற பொழுது தனியாகப் போய், இவர்கள் தேட என்னுடன் வந்த 13 பேரை காணவில்லை. உடனடியாக இந்த இடத்துக்கு வரவும் என அறிவித்தார்.=))//

    இது சூப்பரப்பு.

    //
    அய்யாவோட பின்னூட்டத்துக்கு பாராட்டு. அதுதாய் அய்யா!

    //
    வெண்ணிற இரவுகள்....! said...
    இதைப் போன்ற அனுபவம் என் சொந்தத்திலும் நடந்தது .........ரங்கநாதன் தெருவில்.
    ஆனால் துலைந்த பையன் கொஞ்சம் விவரம் ......அதனால் அங்கு நின்று கொண்டிருந்த காவல் நிலைய அதிகாரிகளுடன் பத்திரமாக இருந்தான்
    //

    நன்றி கார்த்திக். பகிர்ந்ததுக்கு நன்றி.

    பிரபாகர் said...

    //
    ஊடகன் said...
    இதை படித்தவுடன் ஐயா ராமகிருஷ்ணனின் துணை எழுத்து தான் மட்டுப்படுகிறது........

    நல்ல வேண்டுகோள்........நன்றி.......
    //
    அவரும் எழுதியிருக்கிறாரா? படித்ததில்லை நண்பா... இது சொந்த அனுபவம், மற்றும் பாதிப்பு.

    //
    ஹேமா said...
    பிரபா,உங்கள் பதிவு படித்ததும் ஜேர்மனியில் வாழும் என் சிநேகிதியை நினைத்துச் சிரித்துவிட்டேன்.மூன்று குழந்தைகள்.
    முறையே 9,6,3 இருக்கும்.சரியான குழப்படி.ஒரு நாள் கோபமாயும் ஆத்திரமாயும்சொன்னாள் "இதுகளின்ர குழப்படி தாங்கமுடியேல்ல.எங்கயும் தூரமாய்க் கொண்டு போய் விட்டிட்டு வந்தாலும்,நாய்க்குட்டிகள் போல வீட்டுக்கு வந்து சேர்ந்திடுங்கள்.
    ஏனென்றால் போன் நம்பர்,வீட்டு விலாசம்,அப்பா அம்மா பெயர் எல்லாம் சொல்லிக் கொடுத்திட்டேனே"என்று.
    //
    ரொம்ப சுவராஸ்யமா இருக்கு ஹேமா! ரொம்ப நன்றிங்க.

    பிரபாகர் said...

    //
    சத்ரியன் said...
    பிரபாகர்,

    பயனுள்ள பதிவு.
    //
    வணக்கம் சத்ரியன். நன்றிங்க.

    //
    கலகலப்ரியா said...
    அவசியமான பதிவு... அசத்துங்க..!

    neenga block nu sonnatha blog nu padikkum apaayam blog ulagaththil undu.. =))
    //
    மருமகனை Blog la தேடுறதா? நல்லாருக்கே சகோதரி...

    க.பாலாசி said...

    //என் மாமா எப்போதோ என்னிடம் சொன்ன ஆனால் இப்போது பின்பற்றுகின்ற சில விஷயங்களை பிடித்திருந்தால் நீங்களும் செய்யலாமே?//

    கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள். கடைசியா சொன்ன பாயிண்ட்ட கடைபிடிச்சா மத்த எதுக்குமே வேலையில்லை.

    (இன்னைக்குத்தான் உங்களின் இந்த வலைதளத்தை பார்க்கிறேன். தொடருங்கள்)

    அன்புடன் மலிக்கா said...

    மிகவும் முக்கியமன பதிவு
    தெளிவா சொல்லியிருக்கீங்க பிரபாகரண்ணா,

    பெற்றோர்களோ இதக்கொஞ்சம் வந்து நோட்டெடுத்துக்கோங்க,,

    ராமலக்ஷ்மி said...

    அவசியமான பதிவு பிரபாகர். இதுபோன்ற பலரின் அனுபவங்களுடன் ஒருபதிவு போட நானும் நினைத்ததுண்டு. குறிப்பாக கடந்த வருடம், கூடச் சென்ற பெரியவர்களின் கவனக் குறைவால் குழந்தை ஒரு மாலின் மாடியிலிருந்து விழுந்து தவறியே போனான்:(!

    கடைசியாகத் தந்திருக்கும் ஆலோசனைகளும் நன்று.

    ரவி said...

    good informative post

    கிறுக்கல்கள்/Scribbles said...

    It is an useful post for the young parents or parents of the young. I know the pain. Once we lost our daughter at Safa park, Dubai. The plight of us was horrible until we found her.

    மணிஜி said...

    காணாமல் போக எனக்கும் ஆசை

    பிரபாகர் said...

    //க.பாலாசி said...
    //என் மாமா எப்போதோ என்னிடம் சொன்ன ஆனால் இப்போது பின்பற்றுகின்ற சில விஷயங்களை பிடித்திருந்தால் நீங்களும் செய்யலாமே?//

    கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள். கடைசியா சொன்ன பாயிண்ட்ட கடைபிடிச்சா மத்த எதுக்குமே வேலையில்லை.

    (இன்னைக்குத்தான் உங்களின் இந்த வலைதளத்தை பார்க்கிறேன். தொடருங்கள்)
    //
    வாங்க பாலாசி. உங்களுக்கு முன்பே சொல்லவில்லை. நன்றி.

    //
    அன்புடன் மலிக்கா said...
    மிகவும் முக்கியமன பதிவு
    தெளிவா சொல்லியிருக்கீங்க பிரபாகரண்ணா,

    பெற்றோர்களோ இதக்கொஞ்சம் வந்து நோட்டெடுத்துக்கோங்க,,
    //
    ரொம்ப நன்றிங்க சகோதரி.

    //
    ராமலக்ஷ்மி said...
    அவசியமான பதிவு பிரபாகர். இதுபோன்ற பலரின் அனுபவங்களுடன் ஒருபதிவு போட நானும் நினைத்ததுண்டு. குறிப்பாக கடந்த வருடம், கூடச் சென்ற பெரியவர்களின் கவனக் குறைவால் குழந்தை ஒரு மாலின் மாடியிலிருந்து விழுந்து தவறியே போனான்:(!

    கடைசியாகத் தந்திருக்கும் ஆலோசனைகளும் நன்று.
    //
    நீங்கள் சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்கிறது. நன்றி சகோதரி.

    பிரபாகர் said...

    //
    செந்தழல் ரவி said...
    good informative post
    //
    தேங்க்ஸ் ரவி. ரொம்ப சந்தோசம்.

    //
    கிறுக்கல்கள் said...
    It is an useful post for the young parents or parents of the young. I know the pain. Once we lost our daughter at Safa park, Dubai. The plight of us was horrible until we found her.
    //
    நன்றி மாமா, பொருட்காட்சி விஷயம் ஜகதீஷ் மாமா தான்.

    NOVEMBER 12, 2009 2:17 AM
    தண்டோரா ...... said...
    காணாமல் போக எனக்கும் ஆசை
    //
    நானும் வர்றேண்ணா, சேர்ந்து காணாமல் போகலாம்...

    ஈரோடு கதிர் said...

    பயனுள்ள இடுகை பிரபா...

    குறைந்த பட்சம் செல்போன் எண் சொல்லிக்கொடுப்பது அவசியம்

    ஜெயந்தி said...

    //"இதுகளின்ர குழப்படி தாங்கமுடியேல்ல.எங்கயும் தூரமாய்க் கொண்டு போய் விட்டிட்டு வந்தாலும்,நாய்க்குட்டிகள் போல வீட்டுக்கு வந்து சேர்ந்திடுங்கள்.
    ஏனென்றால் போன் நம்பர்,வீட்டு விலாசம்,அப்பா அம்மா பெயர் எல்லாம் சொல்லிக் கொடுத்திட்டேனே"என்று.//

    ஹா... ஹா... ஹா...

    ரோஸ்விக் said...

    //உங்களிடைய செல்ஃ போன் எண்ணை சொல்லித்தந்து விடுங்கள்.
    அவர்களின் சட்டைப்பையில் முழு முகவரி மற்றும் தொடர்பு எண் எழுதிய ஒரு தாளினை வைத்துவிடுங்கள். விசிட்டிங் கார்ட் இருந்தால் மிக நன்று. //

    தெளிவா சொல்லியிருக்கீங்க...

    balavasakan said...

    நம்ம ஊரில் குழந்தைகள் தொலைவது என்றால் நல்லூர் திருவிழாதான் எங்கள் வீட்டுக்கு அண்மையில்தான் கோவில் ஒருமுறை எனக்கு 8 வயதிருக்கும் நான் கோவிலில் தொலைந்து போய்...... ஒலிபெருக்கியில் அறிவிக்க நான் வீடு வந்து சேர்ந்திருந்தேன்....

    பிரபாகர் said...

    //
    கதிர் - ஈரோடு said...
    பயனுள்ள இடுகை பிரபா...

    குறைந்த பட்சம் செல்போன் எண் சொல்லிக்கொடுப்பது அவசியம்
    //
    நன்றி கதிர். புலியைப் பார்த்த பூனைதான்... குருவிற்கு வணக்கம்.

    //
    ஜெயந்தி said...
    //"இதுகளின்ர குழப்படி தாங்கமுடியேல்ல.எங்கயும் தூரமாய்க் கொண்டு போய் விட்டிட்டு வந்தாலும்,நாய்க்குட்டிகள் போல வீட்டுக்கு வந்து சேர்ந்திடுங்கள்.
    ஏனென்றால் போன் நம்பர்,வீட்டு விலாசம்,அப்பா அம்மா பெயர் எல்லாம் சொல்லிக் கொடுத்திட்டேனே"என்று.//

    ஹா... ஹா... ஹா...
    //
    வாங்க சகோதரி. உங்கள் வலைத்தளத்தில் Follower-aa இணைய முடிய வில்லை. அதற்கான வழிமுறையை செய்யுங்களேன்.

    பிரபாகர் said...

    //
    ரோஸ்விக் said...
    //உங்களிடைய செல்ஃ போன் எண்ணை சொல்லித்தந்து விடுங்கள்.
    அவர்களின் சட்டைப்பையில் முழு முகவரி மற்றும் தொடர்பு எண் எழுதிய ஒரு தாளினை வைத்துவிடுங்கள். விசிட்டிங் கார்ட் இருந்தால் மிக நன்று. //

    தெளிவா சொல்லியிருக்கீங்க...
    //
    நன்றி நண்பா. சிங்கையில் இருந்தாலும் சந்திக்காமல் இருக்கிறோம். சந்திக்க முயற்சிப்போம்.

    //
    Balavasakan said...
    நம்ம ஊரில் குழந்தைகள் தொலைவது என்றால் நல்லூர் திருவிழாதான் எங்கள் வீட்டுக்கு அண்மையில்தான் கோவில் ஒருமுறை எனக்கு 8 வயதிருக்கும் நான் கோவிலில் தொலைந்து போய்...... ஒலிபெருக்கியில் அறிவிக்க நான் வீடு வந்து சேர்ந்திருந்தேன்....
    //
    வாங்க தம்பி. எல்லோருக்கும் இது சம்மந்தமாய் ஒரு அனுபவம் இருக்கிறது போலிருக்கிறது.

    எண்ணங்கள் 13189034291840215795 said...

    எங்க வீட்டு சின்னவரும் தொலைந்து போனார் நாங்க 3 பேரும் இருக்கும்போதே..
    மாலில்..

    என்னல்லாம் கற்பனை ஓடியது.. ஆளாளுக்கு பதறி போய் அழுதுகொண்டே தேடினோம்..

    பின் Customer service போய் சொல்லலாம் னு அங்கே சென்றால் அங்கு மேஜை மேல் இவனை உட்கார வைத்து ஒரு கூட்டமே சிரித்துக்கொண்டு இருக்குது..

    அவன் கையில் சாக்லேட் கொடுத்து அவனை சாந்தப்படுத்தினார்கள்..
    ஆனால் 2 வயது குழந்தை அவனுக்கு அவர்கள் பாஷையும் புரியவில்லை..

    எங்களைப்பார்த்ததும் அப்படியே தாவினார்..

    மறக்க முடியாத நாள்..

    இப்ப விசிட்டிங் கார்ட் வைப்போம். அல்லது ஒருத்தர் அவனை மட்டும் கண்காணிப்போம்..

    நல்ல பகிர்வு பிரபாகர்..

    பிரபாகர் said...

    //புன்னகை தேசம். said...

    ரொம்ப நன்றிங்க, உங்களின் வரவுக்கு, பகிர்வுக்கு. உங்கள் இடுகைகளை பார்த்தேன், நன்றாய் இருக்கிறது, தொடர்கிறேன்.

    மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

    //இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை என ஒரு பையன் (பெயரை சொல்லி) இங்கு வந்து எங்களிடம் வந்து சொல்லி சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், பெற்றோர்கள் எங்கிருந்தாலும் வரவும்...//
    இந்த கொயந்தைங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியலப்பா.. நம்மள ரொம்ப கலாக்குதுங்க..

    தெய்வசுகந்தி said...

    என் பையனும்(5 வயசு) இங்க ஒரு ஸ்டோர்ல காணாம போயிட்டான்னு நாங்க பதறியடிச்சு தேடினா, அவன் தெளிவா customer serviceல போய் i'm lostனு சொல்லிட்டு அம்மா பேர் போன் நம்பர் எல்லாம் சொல்லி இருக்கிறான். அதுக்குள்ள நாங்க ஸ்டோர் முழுக்க தேடி கடைசில வந்து பாக்கறதுக்குள்ள உயிர் போய் வந்துருச்சு. என்னதான் எல்லாம் சொல்லி கொடுத்துருந்தாலும் அந்த னேரத்துல அது டென்சன் தான்.

    பிரபாகர் said...

    //
    ஷோபிகண்ணு said...
    //இங்கு அப்பாவாவையும் அம்மாவையும் காணவில்லை என ஒரு பையன் (பெயரை சொல்லி) இங்கு வந்து எங்களிடம் வந்து சொல்லி சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், பெற்றோர்கள் எங்கிருந்தாலும் வரவும்...//
    இந்த கொயந்தைங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியலப்பா.. நம்மள ரொம்ப கலாக்குதுங்க..
    //
    ஆமாங்க, இப்போ ரொம்ப விவரம்...

    //
    Deivasuganthi said...
    என் பையனும்(5 வயசு) இங்க ஒரு ஸ்டோர்ல காணாம போயிட்டான்னு நாங்க பதறியடிச்சு தேடினா, அவன் தெளிவா customer serviceல போய் i'm lostனு சொல்லிட்டு அம்மா பேர் போன் நம்பர் எல்லாம் சொல்லி இருக்கிறான். அதுக்குள்ள நாங்க ஸ்டோர் முழுக்க தேடி கடைசில வந்து பாக்கறதுக்குள்ள உயிர் போய் வந்துருச்சு. என்னதான் எல்லாம் சொல்லி கொடுத்துருந்தாலும் அந்த னேரத்துல அது டென்சன் தான்.
    //
    ஆமாம் சகோதரி, எவ்வளவுதான் பத்திரமா இருந்தாலும்... பகிர்வுக்கு நன்றி.

    vinthaimanithan said...

    ’தொலைந்து’ போன அனுபவமும், ‘யாரோ ஒரு மாமா முட்டாய் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்திய’ அனுபவமும் எனக்கும் உண்டு. முத்தான,முக்கியமான் இடுகை

    ©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB