வெந்த புண்ணில் வேல்...

|

ஈழம் தொடர்பாய் தமிழினத்தலைவர் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை நன்றாய் சூடேற்ற அதற்கு இந்த இடுகை.


ஐயா,

ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கக்கூடிய ஈரம், பரிவு கூட உங்களுக்கு இல்லாமல் போனதேன்? தனி ஈழம் அமைத்து தரச் சொல்லவில்லை... எம்மவர் வாழ்வே கேள்வியாய் வழியின்றி இருக்க முக்கிய காரணம் இந்திய அரசு இலங்கைக்கு விடுதலை புலிகளை அழிக்க கொடுத்த தொடர் ஊக்கமும், ஆயுதங்களோடு ஆதரவும் தான். உங்களின் தயவால் இருந்த காங்கிரஸ் ஆட்சியை மிரட்டியாவது உயிர்ப்பலிகளை கொஞ்சம் தடுத்திருக்கலாமே?

மகன், பேரன், மகள் என உங்களின் குடும்பத்தாரின் பதவிக்கே டெல்லியில் கால் கடுக்க காத்திருந்தீரே அப்போதுதான் இங்கு பிரபாகரன் இறந்ததாய் தகவல். பதபதைத்துப் போனோம். இன்று அருமையாய் ஒரு அறிக்கையை வெளியிட்டு எங்களை இன்னமும் முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். எழுதவே மனம் கூசுகிறது. தயவுசெய்து இதைப்பற்றி பேசாமலாவது இருங்களேன், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல்!

இப்படிக்கு ஒரு மானமுள்ள தமிழன்....

40 படித்தோரின் எண்ணங்கள் ::

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் கலைங்கருக்கு தமிழ் மக்கள் என்பது தன் வீட்டு மக்களே

க.பாலாசி said...

சும்மாங்க தலைவரே இங்க உள்ள அரசியல்வாதிங்க. நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா....அது வால சுருட்டிக்கிட்டு எதையோ திங்கத்தான் போகுமாம். அந்த கதைதான்.

அகல்விளக்கு said...

மீண்டும் மீண்டும் அதை நம்பும் மக்கள் இன்னமும் இருப்பதால்தான் இதை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.

சீக்கிரம் ஆப்பு வைக்க முயற்சி செய்வோம்

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள தமிழன் அவர்களே!

தமிழினத் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடைபெறவே இல்லையா? அதில் கொல்லப்பட்டவர்களாக சொல்லப்பட்டவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கிறார்களா? அதில் குறிப்பிடப்பட்ட வாய்ப்புகள் புலிகளுக்கு வழங்கப்படவே இல்லையா?

இதையெல்லாம் சிந்திப்பதை விட்டு விட்டு மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தான் என்பது மாதிரி இப்பதிவு இருக்கிறது :-)

பிரபாகர் said...

கிருஷ்ணா,

இன்றைய நிகழ்வை பாருங்கள்... நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். நினைத்திருந்தால் உயிர்ப்பலியை தடுத்திருக்கலாமா இல்லையா?

பிரபாகர் said...

குழுவாக சென்று போஸ் கொடுப்பதும், கட்டிப்பிடித்து சால்வை இடுவதும், ஒரு எம்.பி.யையே மிரட்டுவதும், நகைச்சுவை என உணர்வ்பூர்வமாய் ஒத்துக்கொண்டு சொல்லுவதும்.... கஷ்டமாயிருக்கு கிருஷ்ணா...

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள தமிழன் அவர்களே!

நானே என் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொண்டேன் என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் வந்து நான் மண்ணை வாரி கொட்டிக் கொள்வதை தடுக்கவில்லை என்பதால் நீங்கள் தான் குற்றவாளி என்று நான் குற்றம் சாட்டினால் அது நியாயமானதா?

அழைக்காமலேயே உதவ முன்வந்த திமுகவின் தலையீட்டை முந்தைய காலங்களிலும் கூட புலிகள் தவிர்த்தார்கள் என்பதை தமிழினத் தலைவர் அதே அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.

தயவுசெய்து அறிக்கையை முழுமையாக வாசிக்கவும்.

பிரபாகர் said...

கிருஷ்ணா,
படிக்காமல் எழுதவில்லை! படித்து மனம் நொந்து தான் எழுதியிருக்கிறேன்...
முன்பு நானும் தி.மு.க வுக்கு ஒட்டுப்போட்டவன்தான். உங்கள் பார்வையில் எப்படி அவர் செய்வதெல்லாம் சரியாய் தெரிகிறதோ அது போல் தான் எனக்கும் மாற்றாய்....

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள தமிழன்,

நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்ட ஒரே தகுதியை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை.

அந்த அறிக்கையை இங்கே எடுத்து வைத்து, அதில் எதெல்லாம் தவறு, எங்கெல்லாம் திரித்திருக்கிறார் என்றெல்லாம் பேசினால் அது நியாயம்.

மாறாக கருணாநிதியை திட்ட ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருந்துவிட்டு, ஒரு அறிக்கை வந்ததுமே ஒரு பதிவு போட்டு உங்கள் தமிழின அரிப்பை முடித்துக் கொள்வது என்பது வெட்கக்கேடானது.

கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்கள், அவரவர் அளவில் கருணாநிதியை திட்டுவதை தவிர்த்து வெறென்ன செய்தார்கள் என்று தமக்கு தாமே கேட்டுக் கொள்ளட்டும்.

பிரபாகர் said...

//ஒரு அறிக்கை வந்ததுமே ஒரு பதிவு போட்டு உங்கள் தமிழின அரிப்பை முடித்துக் கொள்வது என்பது வெட்கக்கேடானது//
கிருஷ்ணா,

விளம்பரத்துக்காக செய்து அரிப்பை முடித்துக்கொள்வது தேவையில்லாத ஒன்று எனக்கு. அறிக்கையை படித்தவுடன் கருத்தை எழுதாமல் அடுத்த நாளா எழுத முடியும்?.

அடுத்து, ஒவ்வொருவரின் பார்வை வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் ஒரே கருத்தோடிருந்தால் அப்புறம் ஏன் பூசல், சச்சரவு?

அதே போல் திட்டுவதே வேலையாயும் இல்லை. ஏன் பார்வையில் புரிந்தவற்றை சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான்.

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள தமிழன்!

நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி சொல்ல விரும்புவது : அந்த அறிக்கையில் நீங்கள் கண்ட தகவல் பிழைகளையோ, திரிப்புகளையோ பட்டியலிடுங்கள்.

மாறாக அவர் அறிக்கை வெளியிட்டதே தவறென்று சொல்லுவது எவ்வகையிலான நியாயம்? கடந்த ஆறுமாதகாலமாக அவர் மீது தொடுக்கப்பட்ட முறையற்ற தாக்குதல்களுக்கான விடையாகவே இவ்வறிக்கையை காண நேர்கிறது. அவரை கண்டபடியாக திட்டுவதற்கு உங்களைப் போன்றவர்களுக்கு உரிமை இருக்கும்போது, அறிக்கை கொடுத்து விளக்கமளிக்க அவருக்கு உரிமையில்லையா?

நான் ஈழத்தமிழர் ஆதரவாளன் என்று நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்ளும் தன்மையை தவிர்த்து, இப்பதிவின் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரியாமலேயே இத்தனை பின்னூட்டங்களை இட வேண்டியிருக்கிறது :-(

புலவன் புலிகேசி said...

மானமுள்ள தமிழனாகிய நாம் அந்த அரசியல்வாதிகளை பற்றி ந்ழுதி எழுதி சலித்து போயிருக்கிறோம்...குடும்ப அரசியலுக்கு எங்கே தெரியப் போகிறது? தமிழனின் வலி

ஈரோடு கதிர் said...

அடச் சீ....

தமிழினத் தலைவர்(!!!) சொல்லுறத சீரியசா எடுத்துக்கிட்டு மனசு நொந்து ஒரு இடுகை வேற போடனுமா....

என்ன பிரபாகர் இது

தமிழினத் தலைவர்(!!!) ஏதோ ஒரு காரணத்துக்காக இதைச் சொல்லியிருப்பாருங்க...

அவர்கிட்ட எதையும் நாம எதிர்பார்க்க கூடாதுங்க....

பிரபாகர் said...

கிருஷ்ணா,

இந்த அறிக்கை கூட இவ்வளவு தாமதமாய் எல்லா ஆனா பிறகு!

//நான் ஈழத்தமிழர் ஆதரவாளன் என்று நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்ளும் தன்மையை தவிர்த்து, இப்பதிவின் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரியாமலேயே இத்தனை பின்னூட்டங்களை இட வேண்டியிருக்கிறது//

அப்படியெல்லாம் பச்சைகுத்திகொள்ள வேண்டும் என்றில்லை கிருஷ்ணா. தவிப்பவர்கள் தமிழர்கள். தலைவர் பலமுறை உதவியிருந்ததை மறுக்கவில்லை. பசிக்கும்போது உணவிடவேண்டும். அது இல்லாது காங்கிரஸ் செய்வதெல்லாம் சரி என பின் செல்லுதல் சரியல்ல என்பது ஏன் கருத்து.

பிரபாகர் said...

//
வெண்ணிற இரவுகள்....! said...
ஆம் கலைங்கருக்கு தமிழ் மக்கள் என்பது தன் வீட்டு மக்களே

//

நன்றி கார்த்திக்....

// க.பாலாசி said...

சும்மாங்க தலைவரே இங்க உள்ள அரசியல்வாதிங்க. நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா....அது வால சுருட்டிக்கிட்டு எதையோ திங்கத்தான் போகுமாம். அந்த கதைதான்.

//

நன்றிங்க பாலாசி...

பிரபாகர் said...

//

அகல்விளக்கு said...

மீண்டும் மீண்டும் அதை நம்பும் மக்கள் இன்னமும் இருப்பதால்தான் இதை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.

சீக்கிரம் ஆப்பு வைக்க முயற்சி செய்வோம்

//

வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க...



//புலவன் புலிகேசி said...

மானமுள்ள தமிழனாகிய நாம் அந்த அரசியல்வாதிகளை பற்றி ந்ழுதி எழுதி சலித்து போயிருக்கிறோம்...குடும்ப அரசியலுக்கு எங்கே தெரியப் போகிறது? தமிழனின் வலி

//

இதை சொல்லப்போயித்தான் என் குருகிட்ட வாங்கி கட்டிகிட்டிருக்கேன்...

பிரபாகர் said...

// ஈரோடு கதிர் said...
அடச் சீ....

தமிழினத் தலைவர்(!!!) சொல்லுறத சீரியசா எடுத்துக்கிட்டு மனசு நொந்து ஒரு இடுகை வேற போடனுமா....

என்ன பிரபாகர் இது

தமிழினத் தலைவர்(!!!) ஏதோ ஒரு காரணத்துக்காக இதைச் சொல்லியிருப்பாருங்க...

அவர்கிட்ட எதையும் நாம எதிர்பார்க்க கூடாதுங்க....
//
வாங்க கதிர்... ம்... அந்த ஆதங்கத்தில எழுதினதுதான் இது.... நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு.

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள ஒரே தமிழன்!

//இந்த அறிக்கை கூட இவ்வளவு தாமதமாய் எல்லா ஆனா பிறகு! //

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவாரு.

”ஏண்டா. கல்யாணம் ஆனதுமே பொண்டாட்டியை அடிச்சா, புதுசா கல்யாணம் ஆனவளை ஏண்டா அடிக்குறேன்னு கேட்குறீங்க.

முழுவாம இருக்கறப்போ அடிச்சா, லோடு ஆனவளை ஏண்டா அடிக்குறேன்னு கேட்குறீங்க. புள்ளை பெத்ததுக்கு அப்புறமா அடிச்சா, புள்ளைத்தாச்சி பொண்ணை போட்டு இப்படி அடிக்கிறீயே மனசாட்சி இருக்கான்னு கேட்குறீங்க. சரி கல்யாணம், புள்ளையெல்லாம் ஆனப்பொறவு அடிச்சா, கல்யாணம் ஆயி இத்தனை வருஷம் கழிச்சி அடிக்கிறீயே அறிவிருக்கான்னு கேட்குறீங்க. எப்பத்தாண்டா எம் பொண்டாட்டியை நான் அடிக்கணும். டைம் டேபிள் போட்டு சொல்லுங்கடா!”

மற்றபடி தமிழீனத் தலைவரின் எதிர்ப்பாளர்களும், தீவிர ஈழ ஆதரவாளர்களும் மனச்சாட்சியைத் தொட்டு நான் முன்பு எழுப்பியிருக்கும் இந்த கேள்விக்கு பதிலைச் சொல்லட்டும்.

”கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்கள், அவரவர் அளவில் கருணாநிதியை திட்டுவதை தவிர்த்து வெறென்ன செய்தார்கள் என்று தமக்கு தாமே கேட்டுக் கொள்ளட்டும்.”

பிரபாகர் said...

இடம் பொருள் ஏவல் என்றிருக்கிறது. கவுண்டமணியின் நகைச்சுவையோடு ஒப்பிடுகிறீர்கள். அதில் கவுண்டமணியின் வாதம் எல்லோராலும் சரியல்ல என ஒரு மனதாய் ஏற்றுக்கொள்ளப்படும் பெண்ணை அடிப்பது.

இதே தலைவர் எதிர் கட்சியில் இருந்திருந்தால் காட்சிகளே வேறு... செய்யும் நிலையில் இருந்து செய்யவில்லையே என்பதுதான் எங்கள் ஆதங்கம்.

என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? கம்மென்று இருக்கவேண்டும் என்றா? அப்புறம் எதற்கு பதவி, பட்டம் என எல்லாம் அவர்களுக்கு?

கண்டிப்பாய் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு ஆண்டவன் புண்ணியத்தில் என்னால் உதவ இயலும், கண்டிப்பாய் செய்வேன்.

vasu balaji said...

பல கேள்விகளுக்கு பட்டியல் தினத் தந்தியில் வெளிவரும் ஈழ வரலாற்றில் உள்ளது. சண்டை போட்டாங்க செத்தாங்க. அதுக்கு யாரும் ஒன்னும் பண்ண முடியாது. சகோதர யுத்தம் இல்லாமலே, தோழமை கட்சிக்கு வலியுறுத்தி சொல்லாமலே, எத்தனை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இறந்தார்களே. அதற்கென்ன செய்ய முடிந்தது. அரை நாள் நாடகம் முடிந்த பிறகு 50000 பேர் அட்ரஸ் தெரியாமல் போனதற்கு மௌனமாக கூட அழமுடியவில்லையே. விடுங்கள் பிரபாகர். நம்ம தலையில 4 குண்டு விழுந்தாலும் தலீவர் வாழ்கதான்.

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள தமிழன்!

முந்தையப் பின்னூட்டங்களில் நான் எழுப்பிய எல்லா கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் நீங்கள் இருக்கும்போது நகைச்சுவையை மட்டுமே என்னால் இனி இங்கே செய்ய இயலும் என்ற நிலை :-(

இடம், பொருள், ஏவலுக்கு இங்கே எந்த வெளியையும் நீங்கள் வைத்திருக்கப் போவதில்லை என்ற அவநம்பிக்கைக்கு பிறகே நகைச்சுவையை கையில் எடுக்க நேர்ந்தது. அதற்கு இடமில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள் நன்றி.

உங்களால் ஒரு குடும்பத்தை நிச்சயம் தத்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விரைவில் அதை செய்துவிட்டு அதையும் பதிவாகப் போடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு பைசாவுக்கும் பிரயோசனமில்லாத இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
பல கேள்விகளுக்கு பட்டியல் தினத் தந்தியில் வெளிவரும் ஈழ வரலாற்றில் உள்ளது. சண்டை போட்டாங்க செத்தாங்க. அதுக்கு யாரும் ஒன்னும் பண்ண முடியாது. சகோதர யுத்தம் இல்லாமலே, தோழமை கட்சிக்கு வலியுறுத்தி சொல்லாமலே, எத்தனை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இறந்தார்களே. அதற்கென்ன செய்ய முடிந்தது. அரை நாள் நாடகம் முடிந்த பிறகு 50000 பேர் அட்ரஸ் தெரியாமல் போனதற்கு மௌனமாக கூட அழமுடியவில்லையே. விடுங்கள் பிரபாகர். நம்ம தலையில 4 குண்டு விழுந்தாலும் தலீவர் வாழ்கதான்.

//

உங்களை தொடர்கிறேன் அய்யா...


//

யுவகிருஷ்ணா said...

மானமுள்ள தமிழன்!

முந்தையப் பின்னூட்டங்களில் நான் எழுப்பிய எல்லா கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் நீங்கள் இருக்கும்போது நகைச்சுவையை மட்டுமே என்னால் இனி இங்கே செய்ய இயலும் என்ற நிலை :-(

இடம், பொருள், ஏவலுக்கு இங்கே எந்த வெளியையும் நீங்கள் வைத்திருக்கப் போவதில்லை என்ற அவநம்பிக்கைக்கு பிறகே நகைச்சுவையை கையில் எடுக்க நேர்ந்தது. அதற்கு இடமில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள் நன்றி.

உங்களால் ஒரு குடும்பத்தை நிச்சயம் தத்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விரைவில் அதை செய்துவிட்டு அதையும் பதிவாகப் போடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு பைசாவுக்கும் பிரயோசனமில்லாத இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.

//

நன்றி கிருஷ்ணா, அந்த அறிக்கையும் அவ்வாறே தோன்றியதால்தான் இந்த இடுகையே!

கண்டிப்பாய் செய்து பின் தெரிவிக்கிறேன்....

புலவன் புலிகேசி said...

//”கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்கள், அவரவர் அளவில் கருணாநிதியை திட்டுவதை தவிர்த்து வெறென்ன செய்தார்கள் என்று தமக்கு தாமே கேட்டுக் கொள்ளட்டும்.”
//

கிருஷ்ணா நீங்கள் கேட்கும் கேள்வியில் நியாயமே இல்லை. ஒரு சாதாரண மனிதனால் ஆதங்கப் பட மட்டுமே முடியும். அரசியல்வாதிகளால் தான் செயல்படுத்தவோ தடுக்கவோ முடியும். இந்த நிலையில் இப்படி கேட்பது அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது.

எனக்கு நானே கேட்டு கொள்வதற்கு எதற்கு தலைவர்கள். மக்கள் கேட்பதை நிறைவேற்றுபவன் தான் தலைவனாக இருக்க வேண்டும்.

பிரபாகர் said...

//மக்கள் கேட்பதை நிறைவேற்றுபவன் தான் தலைவனாக இருக்க வேண்டும்//
சரியான கேள்வி புலிகேசி...

ஹேமா said...

சும்மா இருங்க பிரபாகர்.இந்த நேரத்தில வேற ஏதாச்சும் எழுதியிருக்கலாம் நீங்க.அவர் இப்படியான கடிதங்களை என்ன துடைக்கப் பாவிக்கிறாரோ !

பிரபாகர் said...

உங்கள் வேதனையின் வலி புரிகிறது ஹேமா!

வெண்ணிற இரவுகள்....! said...

//அழைக்காமலேயே உதவ முன்வந்த திமுகவின் தலையீட்டை முந்தைய காலங்களிலும் கூட புலிகள் தவிர்த்தார்கள் என்பதை தமிழினத் தலைவர் அதே அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்//.....தலைவர் எப்படி வேண்டுமானாலும் பேசுவார் தலைவர் பேச்சு உங்களுக்கு தெரியாதா.....?????

//கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்கள், அவரவர் அளவில் கருணாநிதியை திட்டுவதை தவிர்த்து வெறென்ன செய்தார்கள் என்று தமக்கு தாமே கேட்டுக் கொள்ளட்டும்.
//

என்னால் என்ன பண்ண முடியும் சொல்லுங்கள் நான் என்ன முதல்வரா ??? என் மகன் என்ன அமைச்சரா சொல்லுங்கள்.....சரி அதை விடுங்கள் இந்தியாவிலே இருந்து தானே ஆயுதம் போகின்றது ....? அதைத் தடுத்தாரா தலைவர் ...............சொல்லுங்கள்..........ஏன் ஆதரவை விளக்கி இருக்கலாமே சொல்லுங்கள் ............................எத்தனை குழந்தைகள் இறந்தார்கள் சொல்லுங்கள் யுவ கிருஷ்ணா

புலவன் புலிகேசி said...

//யுவகிருஷ்ணா said... உங்களால் ஒரு குடும்பத்தை நிச்சயம் தத்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விரைவில் அதை செய்துவிட்டு அதையும் பதிவாகப் போடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு பைசாவுக்கும் பிரயோசனமில்லாத இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.//

யார் தத்தெடுக்க முன்வந்தாலும் அதை நேரிடையாக செய்ய முடியுமா? இந்த அரசியல்வியாதிகள் தான் விட்டு விடுவார்களா?

Anonymous said...

ப்ளாக்கு எழுதறவனெல்லாம் பெரிய பருப்பா? தலைவர் எது செஞ்சாலும் அதுல அர்த்தம் இருக்கும் ஏன்னா அவுரு ஆளப் பொறந்தவரு ஆத்திரப் பட மாட்டாரு

vanathy said...

நான் சொல்லவிரும்பவது இதுதான்.
அறுபது ஆண்டுகால அரசியல் உரிமைப் போராட்டத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் கற்ற பாடம் ,சிங்கள அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதே.
தாங்கள்
ராணுவரீதியாக பலமாக இருந்தபோது இலங்கை பொருளாதார ரீதியில் நலிந்திருந்தபோது புலிகள்தான் சமதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்தார்கள் அதன்பின்புதான் சமாதான ஒப்பந்தம் உருவானது.
ரணில் விக்கிரமசின்ஹா ஏதோ பெரிய சமாதான வெண்புறா அல்ல ,புலிகள்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை இடைக்கால ஆட்சிசபை அமைப்பு interim self governing authority என்ற விரிவான ஒரு திட்டமாக சமர்பித்தார்கள் ,அதனை ரணில் விக்கிரமசிங்க உடைப்பில் போட்டார்.
சுனாமி வந்த பின்பு வெளிநாடுகளும் நாணய நிதியமும் கொடுத்த பணத்தை தமிழ் பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுப்பதற்காக
புலிகளுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்பு நீதிமன்ற ஆணை மூலம் அந்த ஒப்பந்தந்தத்தை ரணிலின் அரசு குப்பைத்தொட்டுக்குள் போட்டது.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் மூலம் தமிழருக்கு சமஷ்டி ஆட்சிமூலம் அரசியல் அதிகாரம் கொடுப்பதை உள்ளக சுயநிர்ணயம் internal self determination என்ற கோட்பாட்டின் மூலம் புலிகள் ஆதரித்திருந்தார்கள் ,ஆனால் அதை உடனடியாக செயல்படுத்துவதை முயற்சிக்காமல் சிங்கள அரசு தான் இழுத்தடித்தது .

கடைசியாக நடந்த போர்கூட இலங்கை அரசினால்தான் தொடக்கி முடியப்பட்டது. நடேசன் தாம் இன்னும் சமாதானத்தையே விரும்புவதாக தமிழ்நாட்டு ஊடகங்களுக்கே பேட்டி கொடுத்திருந்தார்.
உண்மை என்னவென்றால்
ஈழத்தமிழரின் அரசியல் உரிமைபோராட்டம் உலக பிராந்திய ஆசிய வல்லரசுகளின் மேலாதிக்கப் போட்டியினாலும் அவர்களின் சொந்த அரசியல் பூகோள பொருளாதார ராணுவ நலன்களுக்காகவும் திட்டமிட்டு ஈவிரக்கமில்லாமல் நசுக்கப்பட்டது .
ஒரு விடுதலை இயக்கம் ராணுவ பலத்தோடு சொந்த நிலப்பரப்போடு இருப்பதை விரும்பாத பல நாடுகளின் கூட்டுசதிக்கு சிறிய தேசிய இனமான ஈழத்தமிழினம் தாக்குபிடிக்கமுடியாமல் இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறது.

இதுதான் உண்மை .

tigers have become the victims of their own success.

-வானதி

balavasakan said...

புலிகளுக்காக வேண்டாம் பிரபாகரனுக்காக வேண்டாம் அத்தனை தமிழர்கள் செத்து கொண்டு இருக்கும் போது இவர் ஆட்சியாலிருந்து விலகியிருந்தால் இன்று உலகமே திரும்பி பார்த்திருக்கும் தமிழர்களை 3 லடசம் தமிழர்களை விட மந்திரி பதவிதான் பெருசு என்று டெல்லியில் படுத்துக்கிடந்த கருணாநிதி எல்லாம் ஒரு தமிழன் ....அவனுக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம்....பிறகும் உண்ணாவிரதம் என்று போட்டான் கிழவன் ஒரு நாடகம் சனியன் உலகமே தமிழனைப்பார்த்து காறிதுப்பியிருக்கும்.சீய்...கேவலமானவங்களைப்பற்றி எல்லாம் ஏன் பிரபாகர் அண்ண ஒர் பதிவு எழுதி நேரத்தை வீணக்கிறியழ்

balavasakan said...

//யுவகிருஷ்ணா said...
உங்களால் ஒரு குடும்பத்தை நிச்சயம் தத்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விரைவில் அதை செய்துவிட்டு அதையும் பதிவாகப் போடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு பைசாவுக்கும் பிரயோசனமில்லாத இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்//

ஓகோ....ஒரு குடும்பத்தை த்த்தெடுத்தால் சரியாகிவிடுமோ இழந்த உறவுகளை யார் கொடுபார்கள் உங்களால் இனி முல்லைத்தீவு ராணுவமயமாவதை தடுக்க முடியுமாஏறகனவே யாழ்ப்பாணத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ....அவற்றை மீள வழங்ஙகபோவதில்லை ளன்று அணமையில் அரசு அறிவித்திருக்கிறது...இதை யார் கேட்பது

சத்ரியன் said...

//இப்படிக்கு ஒரு மானமுள்ள தமிழன்....

பிரபா,

"மானங்கெட்டவனுக்கு" எங்கே கேட்க போகுது.

அஹோரி said...

உண்மையில் நீங்கள் மானமுள்ள தமிழன் தான்.
அம்பது ரூவா பிரியாணி பயலுவ திருந்த வேண்டியும் ஒரு பதிவ போடுங்க.

அன்புடன் நான் said...

தமிழினதலைவர் 3 மணி நேரம் உண்ணா விரதம் இருந்ததைப்போல இதயும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்ள‌ வேண்டும்... பிரபா.

Anonymous said...

/மற்றபடி தமி//ழீனத்// தலைவரின் //

அடிவருடி அவரையும் அறியாமல் எழுதியதை பாருங்கள்

கலகலப்ரியா said...

appuram vanthu padichukkarennaa... am feeling not so well..

அன்புடன் மலிக்கா said...

பிரபாகரண்ணா ஓட்டும் போட்டுட்டேன் மானமுள்ள தமிழனுக்கு..

நெத்தியடி கலக்குறீங்கண்ணா..

thiyaa said...

அது சரிங்க தமிழினத் தலைவரா ??????????????

Admin said...

தமிழர்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் ஒரு கொலைதான் கருணாநிதி.

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB