போங்கடா நீங்களும் உங்க பத்திரிக்கை தர்மமும்...

|

மனம் முழுதும் கொதிப்பாயிருந்தது பத்திரிக்கைக்களின் நிழ்காலத் தரத்தினையும் அவர்களின் ஊடக விபச்சாரத்தையும் எண்ணும்போது. எதேச்சையாய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு சிறுவன் விஜயகாந்தை குச்சியினால் அடித்து போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என சொல்வதாய் ஒரு காட்சியினை பார்க்க அந்த தலைப்போடு ஒன்றி எழுத்தாக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

சுதந்திர காலத்தில் பிரிட்டிஷ் ஏகாபத்தியங்களை எதிர்த்ததிலிருந்து எமர்ஜென்சி, போர்பர்ஸ் என பல விஷயங்களை மக்களுக்கு சென்றடையச் செய்து விழிப்புணர்வை ஊட்டியவைகள் பத்திரிக்கைகள் தாம் என்பது இன்று பழங்கதையாகிவிட்டது. பத்திரிக்கைகள் சமுதாய அவலங்களுக்கு துணைபோய் முதுகு வளைந்து பணம் படைத்தோரின் காலடியில் படுத்துக்கிடக்கிறது.

ஆளும் கட்சிக்கு விளம்பரத்திற்காக ஜால்ரா அடிப்பதிலிருந்து அவர்களின் கைப்பாவையாய் மாறி அவர்களின் பிரச்சார பீரங்கிகளாய் மாறி இருக்கின்றன.

சிறு வயதில் தினமலர், சிறுவர் மலர் என்றார் உயிர். போட்டிப்போட்டுக்கொண்டு மாமாவின் கடையில் காத்திருந்து படித்ததெல்லாம் இன்று கதையாகி தினமலர் என்றாலே நெருப்பை அள்ளி தலையில் போட்டார்போல் ஒரு உணர்வு! ஆம், மஞ்சள் பத்திரிக்கையைவிட மகா மட்டமாய் இருக்கிறது அவர்கள் பத்திரிக்கை நடத்தும் விதம்.

குறிப்பாய் ஈழ விஷயங்களில் அவர்கள் காட்டும் ‘அக்கறை’ இருக்கிறதே, மெய்சிலிர்க்க வைக்கிறது. நண்பர் மதுரை சுவாமி அவர்களின் மூலம் திரு பொன்னுசாமி அவர்களின் இடுகையினைப் படித்தபோது  ’ஏன் இவர்களுக்கு இந்தப் பிழைப்பு’ எனத் தோன்றியது.

ஒரு மந்திரி, பத்திரிக்கையாளர்களிடம் எவ்வளவு கேவலமாய் நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நடந்து கொள்கிறார், அதைப்பற்றி எழுத முதுகெலும்பு இல்லை, பக்கத்து வீடுதானே எரிகிறது எனும் மனப்பான்மையில்.

இன்னும் இது பற்றியெல்லாம் நிறைய எழுதலாம்... கொஞ்சம் கூசுகிறது, எங்கே தடித்த வார்த்தைகளைப் பிரயோகித்து தரத்தைக் குறைத்துக்கொள்வேனோ என! நம்மால் முடிந்த ஒன்று, இத்தகைய ஈனர்களைப் புறக்கணிப்போம்.

நடிகைகளின் அந்தரங்கச் சாக்கடையை கிளறுவதே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் எண்ணும்போது இந்த இடுகையின் தலைப்புத்தான் தோன்றியது!

22 படித்தோரின் எண்ணங்கள் ::

Balu said...

Good one. If someone says a sentence of 5-10 words, it will extract words required for its publicity and make money out of it...

வானம்பாடிகள் said...

குளு குளு படம், கிசு கிசுக்கே குடுத்த காசு சரியா போச்சு போய்யாம்பாய்ங்க. நல்லா பொங்குறாரு.

முகிலன் said...

தினமலர் எப்பவுமே இப்பிடித்தான் பிரபாகர்.

நடக்கிற வழியில நரகலைப் பார்த்தா என்ன செய்வீங்க? விலகி நடந்துட்டே இருக்கனும். அது மேல கல்லெடுத்து எறிஞ்சா நம்ம மேலதான் தெரிக்கும்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//சிறு வயதில் தினமலர், சிறுவர் மலர் என்றார் உயிர். போட்டிப்போட்டுக்கொண்டு காத்திருந்து படித்ததெல்லாம்//

இப்போ சிறுவர்மலர் பாக்கவே புடிக்கல ..

க.பாலாசி said...

கடல்ல கரைச்ச காயம் மாதிரி...... என்னத்த சொல்லி என்னப்பண்றது...

//எங்கே தடித்த வார்த்தைகளைப் பிரயோகித்து தரத்தைக் குறைத்துக்கொள்வேனோ என! நம்மால் முடிந்த ஒன்று, இத்தகைய ஈனர்களைப் புறக்கணிப்போம்.//

இதுதான் சரி...

ஈரோடு கதிர் said...

கடும்கோபம்

Joe said...

நல்ல இடுகை, பிரபாகர்.
உங்க கோபம் நியாயமானது தான்.

நான் தின மலர், ஹிந்து செய்தித் தாள்களை புறக்கணித்து பல மாதங்களாகிறது.

Balavasakan said...

எல்லாம் வியாபாரந்தான் மக்களுக்கு நல்லது செய்யவேணுமெண்டு எவனும் இல்லை ...

சேட்டைக்காரன் said...

பத்திரிகைகள் மட்டும் தானா? தொலைக்காட்சி விளம்பரங்களைத் தான் பாருங்களேன்! ஒரு ஆணின் பாடி-ஸ்ப்ரேவுக்கு விளம்பரம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு பெண்களை எவ்வளவு ஆபாசமாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்? ஷேவிங்-பிளேடு விளம்பரத்துக்குக் கூட பெண்ணை அசிங்கமாகக் காட்டித் தான் விற்பனை செய்கிறார்கள். ஜெய் ஹோ!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை

செ.சரவணக்குமார் said...

நியாயமான கோபம் பிரபா.

Sangkavi said...

//நடிகைகளின் அந்தரங்கச் சாக்கடையை கிளறுவதே தொழிலாகக் கொண்டிருக்கும்//

அப்பதான் பத்திரிக்கை விக்கும் என்பது அவர்களின் எண்ணம்.....

நியாயமான கோபந்தான் என்ன செய்ய.....

Anonymous said...

அன்றைய தினமலர் வேறு. இன்றைக்கும் இருக்கும் தினமலர் வேறு. அன்று செய்திக்காக விளம்பரங்களை நீக்கி பிரசுரித்தார்கள் அனால் இன்று செய்திகளை நீக்கி விட்டு வருமானத்திற்காக விளம்பரங்களை மட்டுமே வெளியிடுகின்றனர். அன்றைய தலைமுறை பத்திரிகை ஊழியர்கள் சினிமாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அனால் இன்று அதைதவிர வேறொன்றும் முக்கியம்இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிறுவர்மலர் இப்ப படிக்கிற மாதிரியா இருக்குது..

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...
கடும்கோபம்
//

மாப்பு, பிரபா மேல எதுக்கு இவ்வள்வு கோவம்? நீங்களும் பத்திரிகை எதனாச்சும் நடத்துறீங்களோ??

கோமதி அரசு said...

எல்லாம் பணம் படுத்தும் பாடு.
வேறு என்ன சொல்ல.

தமிழ் வெங்கட் said...

எல்லாம் பணம் படுத்தும் பாடு

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாச்சொன்னீங்க .

அக்பர் said...

//சிறு வயதில் தினமலர், சிறுவர் மலர் என்றார் உயிர். //

ஆமாங்க.

எல்லாமே வியாபாரமான பிறகு என்ன சொல்லி என்ன புண்ணியம்.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

ச.செந்தில்வேலன் said...

நியாயமான கோபம் பிரபாகர். எனக்கும் இது போல தோன்றியதுண்டு.

//பழமைபேசி said...
//ஈரோடு கதிர் said...
கடும்கோபம்
//

மாப்பு, பிரபா மேல எதுக்கு இவ்வள்வு கோவம்? நீங்களும் பத்திரிகை எதனாச்சும் நடத்துறீங்களோ??
//

இது கலக்கல் ;)

கலாநேசன் said...

நியாயமான கோபம்.

' மோதி மிதித்து விடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' தான் நினைவுக்கு வருகிறது.

வைகறை said...

உங்க இடுகையின் தலைப்பு ரொம்ப சரி...!!

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB